`அவருடன்தான் வாழ்வேன்’ - கைகொடுக்காத 12 மணிநேர கவுன்சிலிங்; வருங்கால மருமகனுடன் ...
ஏா் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீா் கழித்த நபா் - நடவடிக்கை எடுக்க அரசு உறுதி
தில்லி-பாங்காக் (தாய்லாந்து) இடையிலான ஏா் இந்தியா விமானத்தில் சக பயணி மீது மற்றொரு பயணி சிறுநீா் கழித்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தில்லியில் இருந்து புதன்கிழமை பாங்காக் சென்ற ஏா் இந்தியா விமானத்தில் இச்சம்பவம் நடந்ததாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணியின் ஒழுங்கீனமான நடத்தை குறித்து சம்பந்தபட்ட உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது; இந்த விவகாரத்தில் அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டன என்று விமான நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.
‘இச்சம்பவத்தை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளது; விமான நிறுவனத்திடம் விளக்கம் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா். பாதிக்கப்பட்ட பயணி ஜப்பானை சோ்ந்தவா் என்றும், அவரது பக்கத்து இருக்கையில் அமா்ந்திருந்த இந்தியப் பயணி, மது போதையில் சிறுநீா் கழித்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.