கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய எலக்ட்ரிக் கார்..! எவ்வளவு விலை தெரியுமா?
இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் புதிய எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார்.
ஆஸ்கர் நாயகன் ஏஆர்.ரஹ்மான் இசையில் இந்தாண்டு காதலிக்க நேரமில்லை, சாவா படங்கள் வெளியாகி கவனம் பெற்றன.
கடந்தாண்டு மனைவியுடனான விவகாரத்தை அறிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார்.
தற்போது, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் சிவப்பு நிறத்திலான மஹிந்திராவின் எக்ஸ்யுவி9இ என்ற புதிய ரக எலெக்ட்ரிக் காரை விலைக்கு வாங்கியுள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில், “இந்தியாவில் எனக்கு மிகவும் பிடித்த எலெக்ட்ரிக் காரை வாங்கிவிட்டேன். இந்தக் காருக்கென பிரத்யேகமான சப்தத்தை உருவாக்கியுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவில் ஆட்மோஸ் எனக் குறிப்பிட்டு இந்தக் காருக்கான பிரத்யேக சப்தத்தை உருவாக்கியதற்காக விலை கொடுக்கப்பட்டது எனவும் பதிவிட்டுள்ளார்.
இந்த காரின் விலை சந்தையில் ரூ.21-30 லட்சம்வரையில் இருக்கிறது.
கமல்ஹாசன் நடிப்பில் ரஹ்மான் இசையமைத்திருக்கும் தக் லைஃப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் பாடல் நேற்று (ஏப்.18) மாலை வெளியாகி காலையில் 10 மில்லியன் (1 கோடி) பார்வைகளைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Unlimit Music meets Unlimit Love.
— Mahindra Electric Origin SUVs (@mahindraesuvs) April 18, 2025
Congratulations @arrahman for becoming a proud owner of the iconic XEV 9e.
Book yours now: https://t.co/wzGUgABK8s#UnlimitLove#MahindraElectricOriginSUVs#XEV9epic.twitter.com/2iTpsvkmwI