செய்திகள் :

ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு!

post image

தமிழ்நாட்டில் செயலாளர்கள் பொறுப்பில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. உமாநாத் ஐஏஎஸ் முதல்வரின் முதன்மை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், 10க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்புச் செயலாளர்கள், ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறுபான்மை நல ஆணையரான ஆசியா மரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கே.எஸ்.கந்தசாமி தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராகவும், இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் (சென்னை) ஆணையராக பொன்னையா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2001 ஆம் ஆண்டைச் (பேட்ஜ்) சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு முதன்மைச் செயலர் அந்தஸ்து அளவில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... மன்மோகன் சிங்: கருணை காட்டும் வரலாறு!

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக்கோரி தீர்மானம்!

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து காலியான ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோட்டில் இன்று(ஜன. 4) நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

வேலூர் எம்.பி. கதிர் ஆனந்திற்குச் சொந்தமான கல்லூரியில் 2-வது நாளாக சோதனை!

வேலூர் எம்.பி. கதிர் ஆனந்திற்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியில் 24 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிருஸ்டியான்பேட... மேலும் பார்க்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகினர். சாத்தூர் அருகே அப்பைய நாயக்கன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று(ஜன. 4) காலை வெடி விபத்து ஏற்பட்டுள்ள... மேலும் பார்க்க

2024: தமிழ்நாட்டில் 123 யானைகள் உயிரிழப்பு

கடந்தாண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 123 யானைகள் உயிரிழந்துள்ளன.தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 2024 ஆம் ஆண்டில் 123 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அவற்றில் 107 யானைகள் இயற்கையாகவு... மேலும் பார்க்க

கரும்பு கொள்முதல்: முன்பதிவு செய்ய விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை அழைப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்கான கரும்புகள் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதற்கு விவசாயிகள் முன்பதிவு செய்யலாம் என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்தத் துறை ... மேலும் பார்க்க

நீலகிரியில் உறை பனி வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.4) இரவு நேரங்களில் உறை பனி ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 3 நாள்களுக்கு வட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெ... மேலும் பார்க்க