டொனால்டு டிரம்ப் வெற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிப்பு: ஜன.20 பதவியேற்பு...
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய விருப்பமுள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய வெல்டர், பைப்பிங் பேப்ரிகேட்டர், பைப்பிங் பிட்டர், கட்டமைப்பு ஃபேப்ரிகேஷன், ஸ்ட்ரக்சர் பிட்டர், மில்ரைட் பிட்டர், கிரைண்டர்,கேஸ் கட்டர் மற்றும் பைப்பிங் போர்மேன் ஆகிய பணிகளுக்கான பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சம்ந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவத்துடன் 44 வயதிற்குட்டவர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்டர் பணிக்கு மாதம் ரூ. ரூ. 40,000 முதல் ரூ.78,000, பைப்பிங் பேப்ரிகேட்டர் ரூ.40,000 முதல் ரூ.51,000, பைப்பிங் பிட்டர் ரூ. 36,000 முதல் ரூ.42,000, ஸ்ட்ரக்சர் பேப்ரிகேட்டர் ரூ. 42,000 முதல் ரூ.51,000, ஸ்ட்ரக்சர் பிட்டர் ரூ.36,000 முதல் ரூ.42,000, மில்ரைட் பிட்டர் ரூ. 42,000 முதல் ரூ. 51,000, கிரைண்டர்,கேஸ் கட்டர் ரூ. 30,000 முதல் ரூ. 32,000 மற்றும் பைப்பிங் போர்மேன் ரூ.53,000 முதல் ரூ.60,000 வரை ஊதியமாக வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் இருப்பிடம் ஆகியவை அந்நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
இதையும் படிக்க |வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் வேலை!
மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்த நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்தினால் போதும்.
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு தகுதியும் விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் உடனடியாக www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பப் படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகலினை தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தொலைபேசி எண் 044-22502267 மற்றும் வாட்ஸ்ஆப் எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ, ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நேரிடையாக பதிவு செய்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.