செய்திகள் :

ஐக்யூ நிறுவனத்துக்குப் போட்டியாக ரியல்மி! ஏப். 9-ல் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

post image

ரியல்மி நிறுவனத்தின் இரு புதிய ஸ்மார்ட்போன்கள் ஏப். 9ஆம் தேதி அறிமுகமாகின்றன.

நர்ஸோ வரிசையில் ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ மற்றும் நர்ஸோ 80எக்ஸ் ஆகிய இரு போன்கள் இந்தியாவில் அறிமுகமாகின்றன.

இந்த இரு ஸ்மார்ட்போன்களும் ரியல்மி நர்ஸோ 70 ப்ரோ, நர்ஸோ 70எக்ஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்களின் அடுத்தக்கட்ட தயாரிப்பாக வெளியாகின்றன. இரு ஸ்மார்ட்போன்களும் 6000mAh மின்கலன் திறனுடன் வருவது உறுதியாகியுள்ளதால், ரியல்மி வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிறப்புகள் என்னென்ன?

ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ, நர்ஸோ 80எக்ஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும் ஏப். 9ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

5ஜி பயன்பாட்டை உள்ளடக்கிய ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ இந்திய சந்தையில் ரூ. 20,000 -க்கு விற்பனையாகவுள்ளது. இதேபோன்று நர்ஸோ 80எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ. 13,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 6400 இயங்குதளத்துடனும், நர்ஸோ 80எக்ஸ் டைமன்சிட்டி 7400 இயங்குதளத்துடனும் அறிமுகமாகிறது.

இரு ஸ்மார்ட்போன்களும் 6000mAh மின்கலன் திறன் உடையவை. ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ 80 வாட்ஸ் திறனுடனும், நர்ஸோ 80எக்ஸ் 45 வாட்ஸ் திறனுடனும் வருகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் 4500 நிட்ஸ், ஒளி அளவு வெளிச்சம் கொண்டது.

இந்த இரு ஸ்மார்ட்போன்களுமே ஏப். 11ஆம் தேதி வெளியாகும் சீனாவின் ஐக்யூ நிறுவனத்தின் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக சந்தையில் களமிறக்கப்படுகிறது.

இதையும் படிக்க | ஐபிஎல் ரசிகர்களுக்காக... ஒரு ரூபாய்க்கு 1 ஜிபி! பிஎஸ்என்எல் புதிய அறிவிப்பு!!

ஏபிஎஸில் 3 வகைகள்..! பஜாஜ் பல்சர் என்.எஸ்.160.!

ஏபிஎஸ் பிரேக்கில் மேம்படுத்தப்பட்ட மூன்று வகைகளுடன் பல்சர் என்.எஸ்.160 பைக்கை பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது. இதில், 160.3cc ஆயில் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜினுடன் 5 ஸ்பீட் கியர் பாக்ஸ்களும... மேலும் பார்க்க

சாகச விரும்பிகளுக்கான சிஎஃப் மோட்டோ 450 எம்டி.!

நெடுந்தூரங்களுக்கு பயணம் மேற்கொள்ள விரும்புவர்களுக்காக ரூ.4 லட்சத்தில் புதிய பைக் ஒன்றை சிஎஃப் மோட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இந்திய போக்குவரத்து சந்தையில் ஏஎம்டபிள்யூ நிறுவனத்துடன் இ... மேலும் பார்க்க

இந்திய ஐ-போன்களை அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்யும் ஆப்பிள்!

வரிவிதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ-போன்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது அமெரிக... மேலும் பார்க்க

ஏப்ரலில் வெளியாகும் புதிய ஸ்மார்ட்போன்கள்! எதை வாங்கலாம்?!

ஸ்மார்போன் விரும்பிகளுக்கு இந்த ஏப்ரல் மாதம் உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த மாதம் மட்டுமே பல ஸ்மாட்போன்ன் நிறுவனங்கள் தங்களின் புதிய மாடல்களை வெளியிடவுள்ளனர். புதிய தொழில்நுட்ப வசதி... மேலும் பார்க்க

லேப்டாப் தயாரிப்பில் களமிறங்கும் செல்போன் நிறுவனம்!

அமெரிக்காவைச் சேர்ந்த மோடோரோலா நிறுவனம், மடிக்கணினி தயாரிப்பில் களமிறங்கவுள்ளது. இந்திய சந்தைகளுக்கான மடிக்கணினியாக அவை இருக்கும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சாம்சங், ஆப்பிள், இன்ஃபினிக்ஸ் ப... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 50 காசுகள் சரிந்து ரூ.86.26-ஆக முடிவு!

மும்பை: தொடர்ந்து மூன்றாவது அமர்வாக சரிந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 50 காசுகள் சரிந்து ரூ.86.26 ஆக நிலைபெற்றது. இது பொருளாதார இழப்பு குறித்த அச்சங்களைத் தூண்டு... மேலும் பார்க்க