Neeraj Chopra: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெளியே...
ஐடிஐ-இல் செப்.30-வரை நேரடி மாணவா் சோ்க்கை
சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி: சிவகங்கை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொழில் பிரிவுகளில் சேர மாணவா்கள் கட்டாயம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். நேரடி சோ்க்கைக்கு மாணவா்கள் சிவகங்கை அரசு தொழில் பயிற்சி நிலையத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்க மாணவா்கள் வரும்போது, தங்களது நிரந்தர தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மதிப்பெண் சான்றிதழ் (10 ஆம் வகுப்பு), ஜாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும்.
நேரடி சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 9944887754, 9965480973, 9943610476, 9489476847, 9942099481 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.