செய்திகள் :

ஐபிஎல்-இல் 8,000 ரன்களை கடந்த விராட் கோலி..! வில்லியம்சன் கூறியதென்ன?

post image

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் விராட் கோலி குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

ஆர்சிபி அணி இதுவரை ஐபிஎல் கோப்பைகளை வெல்லாத அணியாக இருக்கிறது. ஆனால் அவர்களது ரசிகர்கள் சலைக்காமல் அந்த அணி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஐபிஎல் தொடரில் 8,004 ரன்கள் குவித்துள்ளார்.

முதல் போட்டியில் ஆர்சிபி, கேகேஆர் அணி இன்று மோதுகிறது. 36 வயதாகும் விராட் கோலியின் பேட்டிங் குறித்து வில்லியம்சன் கூறியதாவது:

கோலியின் வேட்கை, ஆர்வம் மாறவில்லை

ஓவ்வொரு சீசனிலும் விராட் கோலி எப்படி பெரிய பாதிப்பை ஏற்படுத்துவாரோ அப்படி இந்த சீசனிலும் செய்வார் என்பதில் குழப்பமில்லை.

ஆர்சிபி அணியை எப்படியாவது கோப்பை வெல்லுவதற்கு விராட் கோலி நிச்சயமாக முயற்சிப்பார். இந்தமுறை ஆர்சிபி கிட்டதட்ட அதை நெருங்கிவிடும்.

ஒரு வீரரின் கிரிக்கெட் வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மாதிரி விளையாடுவார்கள்.

விராட் கோலி பல ஆண்டுகளாக ரன்களை குவித்தாலும் அவரது பேட்டிங் ஸ்டைலில் சிறிதுதான் மாறியுள்ளது. ஆனால், ரன்களை குவிக்க வேண்டுமென்ற அவரது வேட்கை, விளையாட்டின் மீதான ஆர்வம் அப்படியே இருக்கிறது என்றார்.

தமிழில் பேசிய ரவி சாஸ்திரி..! அதிர்ந்த சேப்பாக்கம் திடல்!

சிஎஸ்கே போட்டியின்போது டாஸை சுண்டும்போது ரவி சாஸ்திரி தமிழில் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளத... மேலும் பார்க்க

மும்பைக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த சிஎஸ்கே!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர்... மேலும் பார்க்க

ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனையை நிகழ்த்திய ஆர்ச்சர்!

ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.முதல் 6 ஓவரி... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் புதிய சாதனை!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று (மார்ச் 22) கோலாகலமாகத் தொடங்கியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்... மேலும் பார்க்க

இஷான் கிஷன் சதம்: ஐபிஎல் வரலாற்றில் 2-ஆவது அதிகபட்ச ரன்களை குவித்த சன்ரைசர்ஸ்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியிலேயே சரவெடி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் 6 ... மேலும் பார்க்க

சரவெடியைத் தொடங்கிய சன்ரைசர்ஸ்..! 6 ஓவர்களில் 94 ரன்கள்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியிலேயே சரவெடி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.பவர் ... மேலும் பார்க்க