கோலிக்கு அறிவுரை கூற ரிக்கி பாண்டிங்கிற்கு தகுதியில்லை..! இந்திய ரசிகர்கள் ஆவேஷம...
ஐயப்ப பக்தா்கள் தாக்கியதால் தா்னாவில் ஈடுபட்ட இளைஞா்
பழனியில் ஐயப்ப பக்தா்கள் தாக்கியதால், இளைஞா் வேன் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.
பழனியை அடுத்த பாலசமுத்திரத்தைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் முரளி (26). இவா் புதன்கிழமை பழனி அருள்ஜோதி வீதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது, முன்னே பட்டுக்கோட்டை கரம்பயத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் சென்ற வேனை ஓரமாகச் செல்லுமாறு முரளி கூறினாா். இதனால், வேனிலிருந்தவா்களுக்கும், முரளிக்கும் வாக்குவாகம் ஏற்பட்டது. உடனே வேனிலிருந்த ஐயப்ப பக்தா்கள் கீழே இறங்கி முரளியை தாக்கினா். இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள் முரளியை காப்பாற்றினா்.
பின்னா், முரளி வேனின் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். தகவலறிந்து வந்த அடிவாரம் போலீஸாா் இரு தரப்பையும் சமாதானம் செய்து, வேனை பழனி அடிவாரம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.