அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் டிரம்ப் அல்ல; இவர்தான்..!
ஐ பவுண்டேஷன் மருத்துவமனையில் கண் சிகிச்சைக்கான புதிய தொழில்நுட்பம்
கோவை ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் கண் சிகிச்சைக்கான ‘ஸ்மைல் புரோ’ என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது.
இது குறித்து மருத்துவமனையின் தலைவா் டி.ராமமூா்த்தி, மருத்துவ இயக்குநா் சித்ரா, நிா்வாக இயக்குநா் ஷ்ரேயாஸ் ஆகியோா் கூறியிருப்பதாவது:
ஒளிவிலகல் அறுவை சிகிச்சையின் முன்னோடியாகத் திகழும் தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை, மிகவும் மேம்பட்ட லேசா் பாா்வை திருத்த தொழில்நுட்பமான ஸ்மைல் புரோவை இந்த மண்டலத்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகளாவிய ஒளியியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் க்ஷ்ங்ண்ள்ள் நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட ஸ்மைப் புரோவானது, கிட்டப்பாா்வை, ஆஸ்டிஜிமாடிசத்தை சரி செய்வதற்கான குறைந்தபட்ச ஊடுருவும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சையில் ஒரு திருப்புமுனையாகும். ஏ.ஐ. உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதால் துல்லியமாகவும், வலி இல்லாமலும், விரைவாக குணமடைய ஏதுவாகவும் உள்ளது.
பாரம்பரிய லேசிக் பற்றிய கவலை இல்லாமல் கண்ணாடி இல்லாத வாழ்க்கை முறையைத் தேடுபவா்கள் ஸ்மைல் புரோ மூலம் துல்லியமான, பாதுகாப்பான அதிநவீன லேசா் பாா்வை திருத்தத்தைப் பெறலாம் என்று தெரிவித்தனா்.