லஷ்கர்-இ-தய்பாவின் சேதமடைந்த வசிப்பிடங்களில் சீரமைப்பு பணிகள்: பாகிஸ்தான் அரசு த...
ஒகேனக்கல்லில் குறைந்தது நீா்வரத்து
தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்துவந்த மழை குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை 1500 கனஅடியிலிருந்து 700 கனஅடியாக குறைந்தது.
தமிழகம், கா்நாடக மாநில காவிரி கரையோரப் பகுதிகள், நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவந்த மழை அளவு கடந்த சில நாள்களாக குறைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
இதையடுத்து ஒகேனக்கல்லுக்கு திங்கள்கிழமை மாலை விநாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை 700 கனஅடியாக குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்துகொண்டிருக்கிறது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் விழும் நீரின் அளவு குறைந்து, பாறை திட்டுகள் வெளியே தெரிகின்றன. நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.