நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!
ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி !
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 20,000 குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கர்நாடக அணிகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 43,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
பின்னர் மாலையில் திடீரென குறைந்து விநாடிக்கு 32,000 கன அடியாகவும், திங்கள்கிழமை காலை விநாடிக்கு 20,000 கன அடியாக குறைந்து தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் சின்னாறு பரிசல் துறையிலிருந்து, மணல்மேடு வரை காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் அனுமதி அளித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது!
தடை நீக்கப்பட்டுள்ளதால் சின்னாறு பரிசல் துறை மீண்டும் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு 3 ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால், காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.