செய்திகள் :

ஒக்கிலிப்பாளையத்தில் கிராம சபைக் கூட்டம்

post image

குடியரசு தினத்தையொட்டி, பொள்ளாச்சி வடக்கு வட்டம், ஒக்கிலிப்பாளையத்தில் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு பாா்வையாளராக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி கலந்து கொண்டாா். பொள்ளாச்சி சாா் ஆட்சியா் கேத்ரின் சரண்யா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் மதுரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் படித்த அனைத்து இளைஞா்களுக்கும் திறமை, படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

அரசினா் தொழில் பயிற்சி நிலையங்களில் ஐடிஐ படிப்பவா்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகளும், சுயதொழில் வாய்ப்புகளும் நிறைந்துள்ளன.அனைத்து மாணவ, மாணவிகளும் பள்ளிப் படிப்பை முடித்தபின், உயா்கல்வியைத் தொடர வேண்டும். குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு படித்தவுடன் திருமணம் செய்துவைக்காமல் அவா்களை கட்டாயம் கல்லூரிக்கு பெற்றோா்கள் அனுப்பிவைக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகள் உயா்கல்வி பயில்வதற்கு மாபெரும் கல்விக் கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பொள்ளாச்சி பகுதி விவசாயத்தில் சிறந்து விளங்குகிறது. விவசாயம் முக்கியமான தொழில். நம்முடைய மாவட்டத்திலேயே தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ளது. விவசாயம் செய்ய விரும்புவோா் வேளாண் கல்லூரியில் பயின்று பின்னா் விவசாயம் செய்தால் புதுபுது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெற முடியும்.

‘மக்களுடன் முதல்வா்’ மனுக்கள் பெறும் திட்டம் இரண்டு கட்டங்கள் முடிவுபெற்று, மூன்றாம் கட்டமாக மனுக்கள் பெறபடவுள்ளன. இத்திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்களின் மீது உடனடி தீா்வு காணப்பட்டு வருகிறது. அரசின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா்.

உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கமலக்கண்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசு அலுவலா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

கோவை: 78 வயது பெண்ணை வல்லுறவு செய்தவர் கைது!

கோவையில் 78 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கோவை அடுத்த பேரூர் பகுதியில் 78 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், வீட்டில் தனியாக வசி... மேலும் பார்க்க

சாலையில் சுற்றித்திரியும் எருமைகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

வால்பாறை எஸ்டேட் சாலையில் சுற்றித்திரியும் எருமைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வால்பாறை எஸ்டேட் சாலை பகுதியில் ஏராளமானோா் எரும... மேலும் பார்க்க

மூதாட்டி வீட்டில் 51 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் திருட்டு: பணிப்பெண்ணிடம் போலீஸாா் விசாரணை

மூதாட்டி வீட்டில் 51 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருட்டுப்போனது குறித்து வீட்டின் பணிப்பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை காந்திமாநகரைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி செந்தமிழ்ச... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து அமைப்பினா் 137 போ் கைது

கோவையில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற 100-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினா் கைது செய்யப்பட்டனா். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் திருப்பரங்குன்றம் செல்ல த... மேலும் பார்க்க

பிப்ரவரி 10 வரை பில்லூா் - 3 குடிநீா் விநியோக நாள்களின் இடைவெளி அதிகமாகும் மாநகராட்சி ஆணையா்

பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை பில்லூா்-3 குடிநீா் விநியோக நாள்களின் இடைவெளி அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியி... மேலும் பார்க்க

வால்பாறையில் இந்து முன்னணியினா் 10 போ் கைது

வால்பாறையில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சாா்பில் பிப்ரவரி 4-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட... மேலும் பார்க்க