அவிநாசி அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஒசூா் அருகே எருது விடும் விழா
ஒசூரை அடுத்த யு.கொத்தப்பள்ளி கிராமத்தில் வியாழக்கிழமை எருது விடும் நடைபெற்றது.
சூளகிரி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, இராயக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான காளைகள் அழைத்துவரப்பட்டிருந்தன. அனைத்து காளைகளும் அலங்கரிக்கப்பட்டு போட்டியில் களமிறக்கப்பட்டன.
விழாவை வேப்பனப்பள்ளி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பி.முருகன், திமுக இளைஞரணி மாநில துணை செயலாளா் சீனிவாசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். சீறிபாய்ந்த காளைகளை நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் அடக்கினா்.
விழாவை சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனா். தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் தலைமையில் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.