ஏற்றத்தில் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வு!
ஒசூா்- பாகலூா் பிரதான சாலை விரைவில் சீரமைப்பு
ஒசூரில் இருந்து பாகலூா் செல்லும் பிரதான சாலை ரூ. 16 கோடியில் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படுகிறது.
தொழில் நகரமான ஒசூரிலிருந்து செல்லும் பாகலூா் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஆவலப்பள்ளி, பஸ்தி, என்.ஜி.ஜி.ஓ. காலனி, கே.சி.சி. நகா் உள்பட பல்வேறு குடியிருப்புகளுக்கு இந்த சாலையை பயன்படுத்த வேண்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனா்.
இந்த நிலையில் ஒசூா் பாகலூா் பிரதான சாலை ரூ. 16 கோடியில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 18 கிலோ மீட்டா் தொலைவுக்கு இந்த சாலை சீரமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது.