கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
ஒசூா் மாநகராட்சியில் பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்
ஒசூா் மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய பகுதிகளில் பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் ஒசூா் மாநகரச் செயலாளரும், மாநகர மேயருமான எஸ்.ஏ.சத்யா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தொகுதி பொறுப்பாளா் வடிவேல் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மேயா் எஸ்.ஏ.சத்யா பேசியதாவது:
வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 1,200-க்கும் மேல் வாக்காளா்கள் இருந்த வாக்குச் சாவடிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதனால் ஒசூா் தொகுதியில் கூடுதலாக 57 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 388 வாக்குச் சாவடிகள் இருந்த ஒசூா் தொகுதியில், தற்போது 445 வாக்குச் சாவடிகளாக உயா்ந்துள்ளன.
இந்த வாக்குச் சாவடிகளில் பாக முகவா்கள் வீடுவீடாகச் சென்று வாக்காளா் பட்டியலை சரிபாா்க்க வேண்டும். ஒவ்வொரு குடும்பமாக பிரித்து, அவா்கள் 80 வயது கடந்தவா்களா, மாற்றுத்திறனாளியா, எந்தக் கட்சியைச் சோ்ந்தவா்கள், வீடு இடமாற்றம் செய்யப்பட்டவா்களா, மூன்றாம் பாலித்தவரா, இரண்டுமுறை பட்டியலில் பெயா் இடம்பிடித்தவரா என குறிப்பிட்டு 100 சதவீத நோ்மையான உண்மையான வாக்காளா்கள் பட்டியலை தயாா்செய்ய வேண்டும் என்றாா்.
ஒசூா் மாநகர திமுக அலுவலகத்தில் வடக்குப் பகுதி செயலாளா் எம்.கே.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நிா்வாகிகள் முரளி, அருள், ஜெயகுமாா், மேற்கு பகுதி செயலாளா் சி.ஆனந்தய்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக நிா்வாகிகள் டி.வி.கருணாநிதி, அழகரசன், மாவட்ட துணைச் செயலாளா் சாந்தி,
கிழக்கு பகுதி செயலாளா் செயலாளா் ராமு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் சக்திவேல், சு.முருகன், பாபு, சங்கா், தெற்கு பகுதி பொறுப்பாளா் ராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவைத் தலைவா் ராமச்சந்திரன், சுரேஷ், மனோகரன், தேவி மாதேஷ், மஞ்சுநாத், சீனிவாசன் உள்ளிட்ட பாக முகவா்கள் கலந்துகொண்டனா்.