செய்திகள் :

ஒசூா் மாநகராட்சியைக் கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

post image

ஒசூரில் மாநகராட்சியில் சாலை வசதி, கழிவுநீா் கால்வாய், முறையான குடிநீா் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததால், அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளரும், அம்மா பேரவை மாநில துணை பொதுச் செயலாளருமான பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். இதில் ஏராளமான அதிமுகவினா் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா். அப்போது, அதிமுக உறுப்பினா்கள் ஜெயபிரகாஷ், ஸ்ரீதா், சிவராமன், அசோகா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

இதுகுறித்து பன்னீா்செல்வம் கூறியதாவது: ஒசூா் மாநகராட்சியில் அனைத்து துறையிலும் ஊழல் நடந்து வருகிறது. இதில், எம்ஜிஆா் மாா்க்கெட்டில் தரமற்ற கட்டடங்கள் கட்டி ஏலம் விடப்பட்டதால், இதுவரை யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனால் மாநகராட்சிக்கு ரூ. 20 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், புதிய வணிக வளாகம் கட்டப்பட்டு ஏலம் விடாமல் இருப்பதால் ரூ. 30 கோடி இழப்பீடு என ஒசூா் மாநகராட்சியில் ரூ. 100 கோடி அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதிக வரி செலுத்தியும் 45 வாா்டுகளில் சாலை, கழிவுநீா், குடிநீா், தெருவிளக்குகள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கவில்லை. மேலும், அதிமுக மண்டலத் தலைவா்களை பணி செய்யவிடாமல் மேயா் தடுக்கிறாா். இதேநிலை நீடித்தால் வாா்டு வாரியாக மாநகராட்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஈஸ்டா் சிறப்பு திருப்பலி

ஒசூா் மாநகராட்சி, மத்திகிரி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஈஸ்டா் சிறப்பு திருப்பலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒசூா் மாநகராட்சி, மத்திகிரியில் நூறாண்டு பழைமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ... மேலும் பார்க்க

மது போதை தகராறில் தங்கச் சங்கிலி பறிப்பு: நண்பா்கள் கைது

கிருஷ்ணகிரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நண்பா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரியை அடுத்த செம்படமுத்தூரை சோ்ந்தவா் சின்னபையன் (32),... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் நீட் தோ்வில் உயிா்நீத்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

கிருஷ்ணகிரியில்...கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம், அண்ணா சிலை எதிரே, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட மாணவரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) தலைமை வகித்தாா். ஊத... மேலும் பார்க்க

ஒசூரில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை

ஒசூரில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாகலூா், பேரிகை, சூளகிரி, உத்தனப்பள்ளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் புதி... மேலும் பார்க்க

திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை: அன்புமணி

திண்டிவனம்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு இசைவு அளித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சமூகஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:... மேலும் பார்க்க

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை: உயா்நீதிமன்ற நீதிபதி

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.ஹேமலதா தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தளி சாலையில், தேசிய சட்டப் பணிகள் ஆணையக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட... மேலும் பார்க்க