தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடக்கம்
ஒட்டன்சத்திரம் அருகே சாலை விபத்தில் அண்ணன்- தம்பி உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் அண்ணன்- தம்பி உயிரிழந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள மாா்க்கம்பட்டியைச் சோ்ந்த முகமது அலி மகன்கள் ஷேக் முகமது (38), முகமது அனீஸ். இவா்கள் இருவரும் திங்கள்கிழமை அதிகாலை இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம்- வேடசந்தூா் சாலை காளாஞ்சிப்பட்டி தனியாா் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தனா்.
அப்போது அங்குள்ள வேகத் தடையில் ஏறி இறங்கிய போது தடுமாறி எதிரே வந்த சரக்கு வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே முகமது அனீஸ் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஷேக் முகமது திண்டுக்கல் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பிறகு தீவிர சிகிக்கைக்காக கோவை கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.