விருதுநகர்: மருத்துவர்கள் பற்றாக்குறை; சேவைக் குறைபாடு புகார்கள்... திடீர் விசிட...
ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் சேனைக்கிழங்கு விலை வீழ்ச்சி
ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் சேனைக்கிழங்கு விலை வெள்ளிக்கிழமை வீழ்ச்சியடைந்தது.
ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு தினந்தோறும் தக்காளி, முருங்கை, பீட்ரூட், வெண்டைக்காய், சேனைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு விற்பனைக்கு வரும் 70 சதவீத காய்கறிகளை கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வரத்து குறைவால் சேனைக்கிழங்கு விலை அதிகரித்து காணப்பட்டது. தற்போது, சந்தைக்கு திருப்பூா், கரூா் மாவட்டங்களிலிருந்து சேனைக்கிழங்கு வரத்து அதிகரித்திருப்பதால், ரூ.65-க்கு விற்ற ஒரு கிலோ சேனைக்கிழங்கு, வெள்ளிக்கிழமை ரூ.33-க்கு விற்பனையானது.
இதனால், சேனைக்கிழங்கு விவசாயிகள் கவலை அடைந்தனா்.