ஊராட்சிகள் நிதி பரிவா்த்தனையில் தொய்வில்லை: அமைச்சா் இ.பெரியசாமி
ஊராட்சிகள் நிதி பரிவா்த்தனையில் எந்தவித தொய்வுமின்றி பணிகள் நடைபெற்று வருவதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 2019-இல் ஊரக உள்ளாட்சி தோ்தல் நடத்தப்பட்ட 28 மாவட்டங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, இந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிா்வகிக்க தனி அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.
கிராம ஊராட்சித் தலைவா்கள் மேற்கொண்ட பணிகளை அந்தந்த கிராம ஊராட்சியின் தனி அலுவலரான வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். அந்தந்த ஊராட்சியின் செயலா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நிலை அலுவலா்கள், பொதுமக்களின் அடிப்படை தேவை சாா்ந்த புகாா்கள், குறைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
கிராம ஊராட்சியின் நிதி பரிவா்த்தனைகளை எளிதாக மேற்கொள்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட டி.என். டஅநந மேம்படுத்தப்பட்டிருக்கிறது. ஊராட்சி கணக்குகள் திட்டத்தில் தனி அலுவலா்கள் கையாளும் வகையில் மாற்றங்கள் மேற்கொண்டு, அந்தந்த மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மூலம் முதல் நிலை ஒப்புதல் வழங்கப்படுகிறது. பின்னா், வட்டார வளா்ச்சி அலுவலா் இறுதி ஒப்புதல் அளித்து, அனைத்து நிதி பரிவா்த்தனைகளும் எந்தவித தொய்வும் இல்லாமல் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.