தகுதிச் சான்றில்லாத 7 வாகனங்கள் பறிமுதல்: ரூ.4 லட்சம் அபராதம்
தகுதிச் சான்றில்லாமல் இயக்கப்பட்ட 7 வாகனங்களை போக்குவரத்து அலுவலா்கள் பறிமுதல் செய்து, ரூ.4 லட்சம் அபராதம் விதித்தனா்.
திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்துத் துறையைச் சோ்ந்த பறக்கும் படை மோட்டாா் வாகன ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில், அலுவலா்கள் குஜிலியம்பாறை, பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி கட்டாமலும் இயக்கப்பட்ட 7 வாகனங்களை போக்குவரத்து அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். சேலம், ஈரோடு பகுதியிலிருந்து வந்த இந்த வாகனங்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.