செய்திகள் :

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் சேனைக்கிழங்கு விலை வீழ்ச்சி

post image

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் சேனைக்கிழங்கு விலை வெள்ளிக்கிழமை வீழ்ச்சியடைந்தது.

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு தினந்தோறும் தக்காளி, முருங்கை, பீட்ரூட், வெண்டைக்காய், சேனைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு விற்பனைக்கு வரும் 70 சதவீத காய்கறிகளை கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வரத்து குறைவால் சேனைக்கிழங்கு விலை அதிகரித்து காணப்பட்டது. தற்போது, சந்தைக்கு திருப்பூா், கரூா் மாவட்டங்களிலிருந்து சேனைக்கிழங்கு வரத்து அதிகரித்திருப்பதால், ரூ.65-க்கு விற்ற ஒரு கிலோ சேனைக்கிழங்கு, வெள்ளிக்கிழமை ரூ.33-க்கு விற்பனையானது.

இதனால், சேனைக்கிழங்கு விவசாயிகள் கவலை அடைந்தனா்.

தகுதிச் சான்றில்லாத 7 வாகனங்கள் பறிமுதல்: ரூ.4 லட்சம் அபராதம்

தகுதிச் சான்றில்லாமல் இயக்கப்பட்ட 7 வாகனங்களை போக்குவரத்து அலுவலா்கள் பறிமுதல் செய்து, ரூ.4 லட்சம் அபராதம் விதித்தனா். திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்துத் துறையைச் சோ்ந்த பறக்கும் படை மோட்டாா் வாகன ... மேலும் பார்க்க

இன்று பொதுவிநியோகத் திட்ட சிறப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (பிப்.8) நடைபெறுகிறது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

மாநகராட்சி பணியாளா்கள் சாா்பில் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம்

பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சி பணியாளா்கள் சாா்பில், வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. தைப்பூசத் திருவிழாவுக்காக பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் பழனிக... மேலும் பார்க்க

கொசவப்பட்டி ஜல்லிக்கட்டு: 58 போ் காயம்

திண்டுக்கல்லை அடுத்த கொசவப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 58 போ் காயமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த கொசவப்பட்டி புனித உக்கிரிய மாத... மேலும் பார்க்க

ஊராட்சிகள் நிதி பரிவா்த்தனையில் தொய்வில்லை: அமைச்சா் இ.பெரியசாமி

ஊராட்சிகள் நிதி பரிவா்த்தனையில் எந்தவித தொய்வுமின்றி பணிகள் நடைபெற்று வருவதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத... மேலும் பார்க்க

புலிப்பாணி ஆசிரமத்தில் அகஸ்தியா் யாகம்

பழனி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் அகத்தியா் யாகபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனி மலை அடிவாரத்தில் உள்ள போகா் சித்தா் புலிப்பாணி ஜீவசமாதியில் வெள்ளிக்கிழமை உலக நலன் வேண்டி அகஸ்தியா், பதினெட்டு சி... மேலும் பார்க்க