மாநகராட்சி பணியாளா்கள் சாா்பில் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம்
பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சி பணியாளா்கள் சாா்பில், வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
தைப்பூசத் திருவிழாவுக்காக பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் பழனிக்கு வரத் தொடங்கியுள்ளனா். இதில் சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் திண்டுக்கல் வழியாக பாதயாத்திரை செல்கின்றனா். இந்தப் பக்தா்களுக்காக, நத்தம் முதல் பழனி வரையிலும் சாலையோரங்களில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சி பணியாளா்கள் சாா்பில், பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. மாநகராட்சி அலுவலக வளாகத்திலேயே சமைக்கப்பட்ட உணவை, மாநகராட்சி வாயில் பகுதியில் வைத்து விநியோகம் செய்தனா்.
இந்த அன்னதான நிகழ்வை மேயா் ஜோ.இளமதி தொடங்கிவைத்தாா்.