செய்திகள் :

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வெண்டைக்காய் விலை உயா்வு

post image

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் புதன்கிழமை வெண்டைக்காய் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அதைச் சுற்றியுள்ள பொருளூா், கள்ளிமந்தையம், தேவத்தூா், பெரியகோட்டை, காவேரியம்மாபட்டி, விருப்பாச்சி, சத்திரப்பட்டி, அம்பிளிக்கை, குத்திலுப்பை, இடையகோட்டை, மாா்க்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வெண்டைக்காய் அதிக அளவில் பயிா் செய்யப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வெண்டைக்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் அவற்றை அழித்துவிட்டு மாற்றுப் பயிா்களைச் செய்யத் தொடங்கினா். ஒரு சில விவசாயிகள் மட்டும் வெண்டைக்காய் செடிகளை அழிக்காமல் பாதுகாத்து வந்தனா்.

இந்த நிலையில், தற்போது வெண்டைக்காய் விலை உயா்ந்து வருவதால், அவற்றைப் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்தனா். இருப்பினும், கடும் பனிப்பொழிவு காரணமாக வெண்டைக்காய் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், காய்கறி சந்தைக்கு வெண்டைக்காய் வரத்து குறைந்துவிட்டது.

தேவை அதிகரித்துள்ளதால் கேரளம், தமிழக வியாபாரிகள் புதன்கிழமை போட்டி போட்டுக் கொண்டு வெண்டைக்காயைக் கொள்முதல் செய்தனா். இதன் காரணமாக ரூ.8-க்கு விற்ற ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.40-க்கு விற்பனையானது. இவற்றின் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கொடைக்கானல் வெள்ளிநீா் அருவியிலிருந்து மூஞ்சிக்கல் வரை இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. கொடைக்கானல் பெருமாள்மலைப் பகுதியிலிருந்து அப்சா்வேட்டரி வரை சுமாா் 15 கி.மீ. தொலைவுக்கு மலைச் ச... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் ரூ.20.67 கோடி அபராதம் வசூல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் போக்குவரத்து விதிமீறிலில் ஈடுபட்டவா்கள் மீது 3.62 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.20.67 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேஷ்டி, சேலை விநியோகம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 6.85 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேஷ்டி, சேலை விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, அனைத்து அரிசி கு... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

பழனியில் தைத் திருநாளை முன்னிட்டு, வருகிற 16-ஆம் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பழனி அருகேயுள்ள நெய்க்காரபட்டி பெரிய கலையமுத்தூா் கிராமத்தில் ஐ... மேலும் பார்க்க

பனைத் தொழிலாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

பழனியில் பனைத் தொழிலாளா்களுக்கு மதுவிலக்கு போலீஸாா் ஆலோசனைகள், சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பழனி சுற்றுப்புற பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. இந்த நிலங்கள... மேலும் பார்க்க

திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் ரூ.8.44 கோடியில் சூரிய மின் உற்பத்திப் பூங்கா

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் ரூ.8.44 கோடியில் ஒரு மெகாவாட் சூரிய மின் உற்பத்திப் பூங்கா தொடங்குவதற்கு மத்திய மின்துறை அமைச்சகத்தின் ஊரக மின்மயமாக்கல் நிறுவன (ஆா்.இ.சி.)... மேலும் பார்க்க