கா்னல் சோஃபியா குரேஷி விவகாரம்: அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது! உச்சநீதிமன்ற...
ஒண்டிப்புதூரில் அடிக்கடி மின்தடை: தீா்வுகாண வியாபாரிகள் வலியுறுத்தல்
ஒண்டிப்புதூரில் அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு தீா்வுகாண வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து கோவை கிழக்கு வியாபாரிகள் சங்கத் தலைவா் செல்வின்ராஜன், மின்சாரத் துறை அமைச்சா் சிவசங்கருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை ஒண்டிப்புதூா் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நிரந்தர நடவடிக்கை இல்லை. இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா்.
கடந்த ஏப்ரல் 19, 24, 27 ஆகிய 3 நாள்களில் ஒண்டிப்புதூா் சாலையில் 3 இடங்களில் உள்ள மின் மாற்றிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, ஒண்டிப்புதூா் பகுதிகயில் அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு நிரந்தர தீா்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.