செய்திகள் :

ஒன் பை டூ

post image

சிவ.ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

“ ‘நந்தனார் கல்விக் கழக’ மேடையில்தான் ஆளுநர் இவ்வாறு பேசியிருக்கிறார். ‘அந்த நந்தனாரை யார் கோயிலுக்குள் செல்லவிடாமல் தடுத்தது?’ என்பது ஆளுநருக்குத் தெரியுமா... அவர் சொல்லும் அந்தத் தீய சக்தியே ஆளுநர் ஆதரிக்கும் சனாதனம்தான். அதை எதிர்த்துத்தான், ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்று சட்டமியற்றியது தி.மு.க அரசு. அதோடு சாதி, மதப் பிரிவினைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிவருகிறது. அதன் பலனாகத்தான் தமிழக மக்கள் ஒற்றுமையாக இருந்துவருகிறார்கள். தமிழ்நாட்டின் இந்தச் சமூகக் கட்டமைப்பைப் புரிந்துகொள்ளாமல், வாய்க்கொழுப்பால் உளறிக்கொண்டிருக்கிறார் ஆர்.எஸ்.எஸ் ரவி. தமிழகத்தில் ஆதிதிராவிடப் பிரிவு உட்பட பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த பலரும் ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக, துணைவேந்தர்களாக இன்னும் பல பெரிய பொறுப்புகளுக்கு வந்திருக்கிறார்கள். இந்த மாற்றங்களுக்கெல்லாம் இங்கு திராவிட இயக்கங்கள் கட்டமைத்துவைத்திருக்கும் சமூக நீதியும், சமத்துவமும்தான் காரணம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அஜண்டாவை இப்படி மேடைக்கு மேடை பேசி மக்களிடையே பிரிவினையைத் தூண்டினால், தமிழக மக்களே விரைவில் ஆளுநரை விரட்டுவார்கள்!”

சிவ.ஜெயராஜ், கரு.நாகராஜன்

கரு.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

“உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். அரை நூற்றாண்டாகத் தமிழகத்தில் நடந்துவரும் விஷயங்களைப் பார்த்துத் தெரிந்துகொண்டு, அவர் சொல்லியிருக்கும் கருத்தாகவே இதைப் பார்க்கிறேன். தலித் ஒருவர் முதல்வராக வேண்டும் என்று ஆதரவாகக் குரல் கொடுக்கும்போதுகூட, ஆளுநரை ஒரு தரப்பு வசைபாடுகிறது. கடந்த 60 ஆண்டுகளாக, திராவிடக் கட்சிகள் பட்டியலின மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் இன்றளவும் பல பகுதிகளில் பட்டியலின மக்களால் கோயிலுக்குள் போக முடியாத நிலை இருக்கிறது. ஆனால் கக்கன், பரமேஸ்வரன் போன்றவர்களுக்கு அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை எனப் பல முக்கியமான துறைகளைக் கொடுத்திருந்தார் காமராஜ். இதை தி.மு.க அமைச்சரவையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், யார் உண்மையான சமத்துவ, சமூக நீதிக் கொள்கையுடன் பணியாற்றினார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். `திராவிட மாடல்’ என்று ஒரு போலியான சமூக, சமத்துவத்தைப் பேசுகிறார்கள். அதைச் செயலில் காட்ட முழுமையாகத் தவறிவிட்டது தி.மு.க. இந்தியாவிலேயே பட்டியலினச் சமூகத்தினருக்கு பா.ஜ.க-வைவிட வேறு யாரும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை!”

விஜய்யின் அரசியல் வியூக வகுப்பாளர்... த.வெ.க பவர் சென்ட்டரான ஜான் ஆரோக்கியசாமி யார்?

கட்சிக்குள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாரின் இணைப்பைத் தொடர்ந்து, உற்சாகத்தில் மிதக்கிறது தமிழக வெற்றிக் கழக வட்டாரம். புதிதாக வந்தவர்களுக்கும் சேர்த்து பொறுப்புகளை அறிவித்திருக்கும் தவெக தலைவர் விஜய், ... மேலும் பார்க்க

"டங்ஸ்டன் விவகாரத்தில் வடிவேலு போல முதல்வர் ஸ்டாலின் நடந்து கொள்கிறார்" - செல்லூர் ராஜூ சொல்வதென்ன?

தன் தொகுதியிலுள்ள முத்துப்பட்டி பகுதியில் புதிய அங்கன்வாடி மையத்தைத் திறந்து வைத்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "எங்களைப் பொறுத்தவரையில் ஏழை, எளிய மக... மேலும் பார்க்க

Sweden: குரானை எரித்து போராட்டம் நடத்திய நபர் சுட்டுக் கொலை - சுவீடனில் பரபரப்பு!

Sweden: குரானை எரித்து கலவரங்களுக்கு வித்திட்ட சல்வான் மோமிகா என்ற நபர், அவரது அப்பார்ட்மென்ட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஸ்வீடன் நாட்டில் உள்ள, ஹோவ்ஸ்ஜோ பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்ப... மேலும் பார்க்க

பட்னாவிஸ், ஷிண்டேயைக் கைது செய்ய உத்தவ் அரசு முயன்றதா? விசாரணை நடத்தும் மகா. பாஜக கூட்டணி அரசு

மகாராஷ்டிராவில் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைந்துள்ளன. கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தல... மேலும் பார்க்க

Seeman: "நாம் தமிழர் கட்சியைத் தடை செய்ய வேண்டும்" - தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு; பின்னணி என்ன?

"நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்புக் குழுவிலுள்ள புகழேந்தி மனு அளித்துள்ளது பரபரப்பை ஏ... மேலும் பார்க்க

Thirumavalavan : 'எந்த அரசியல் கணக்கும் இல்லை!' - ஆதவ் சந்திப்பும் திருமா விளக்கமும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஆதவ் அர்ஜூனா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சந்திப்புக்குப் பிறகு,... மேலும் பார்க்க