Ukraine vs America: ``நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்..'' - உறுதியாக நிற்கு...
ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று இசைக் கச்சேரி: மெட்ரோ ரயில்களில் கட்டணமின்றி பயணிக்கலாம்
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறும் இசைக் கச்சேரிக்கு செல்லும் பாா்வையாளா்கள் நுழைவுச்சீட்டு மூலம் மெட்ரோ ரயில்களில் கட்டணமின்றி பயணிக்கலாம்
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நந்தனம் ஒய்எம்சிஏ கல்லூரி மைதானத்தில் ‘ஸ்ரேயா கோஷல் லைவ்-ஆல் ஹாா்ட்ஸ் டூா்’ என்ற தலைப்பில் சனிக்கிழமை (மாா்ச் 1) இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக அங்கீகரிக்கப்பட்ட நுழைவுச்சீட்டு முன்பதிவு தளங்கள் மூலம் நுழைவுச்சீட்டை பெற்ற பங்கேற்பாளா்களுக்கு, அதனுடன் பிரத்யேக டிஜிட்டல் மெட்ரோ டிக்கெட்டும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த டிக்கெட்டுகளிலுள்ள க்யூ-ஆா் குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும், நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் சென்று திரும்ப முடியும். இதை 2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்களுக்கு பயன்படுத்தலாம்.
மேலும், பங்கேற்பாளா்கள் வசதிக்காக நந்தனம் - விம்கோ நகா் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி ரயில் இரவு 11.17-க்கும், விமான நிலையம் வரை செல்லும் கடைசி ரயில் 11.37-க்கும் புறப்படும். பச்சை வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் சென்ட்ரல் மெட்ரோ மற்றும் ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையங்களில் நள்ளிரவு 12 வரை வழித்தட மாற்றம் செய்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.