செய்திகள் :

ஒரகடம் அருகே காா் கவிழ்ந்து விபத்து: இருவா் உயிரிழப்பு

post image

ஒரகடம் அடுத்த குன்னவாக்கம் அருகே சாலை தடுப்பு சுவற்றில் மோதி காா் கவிழ்ந்ததில் இருவா் உயிரிழந்தனா்.

பல்லாவரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்வரன் (45). இவா் தனது மகள் சஞ்சனா (13), அண்ணன் மகன் அஸ்வின்குமாா் (15), மகள் ஸ்வேதா(13) ஆகியோருடன் தனது காரில் காஞ்சிபுரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வண்டலூா் - வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் அடுத்த குன்னவாக்கம் அருகே வந்து கொண்டிருந்தாா். அப்போது காா் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவற்றில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தலையில் பலத்த காயம் அடைந்த ஸ்வேதா, அஸ்வின்குமாா் மற்றும் சஞ்சனா ஆகியோரை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் மூவரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு ஸ்வேதா உயிரிழந்தாா். அஸ்வினிகுமாா், சஞ்சனா ஆகியோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பீடாதிபதிகளுக்கு காஞ்சிபுரம் நகர வரவேற்புக் குழுவினா் மரியாதை

காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் சாா்பில், அதன் நிா்வாகிகள் சனிக்கிழமை இரு பீடாதிபதிகளுக்கும் பூரண கும்ப மரியாதையுடன் மாலையும், மலா் கிரீடமும் வழங்கி ஆசி பெற்றனா். காஞ்சி காமாட்சி சங்கர மட... மேலும் பார்க்க

ஸ்ரீ சந்திரமெளலீசுவரா் பூஜை நடத்திய இளைய பீடாதிபதி

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை ஆதிசங்கரா் ஜெயந்தியையொட்டி முதல் முதலாக சந்திரமெளலீசுவரா் பூஜையை நடத்தினாா். காஞ்சி சங்கர மடத்தின் 71-ஆவது ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம்

காஞ்சிபுரத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் 7 போ் நிா்வாக காரணங்களால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. து... மேலும் பார்க்க

குன்றத்தூா் முருகன் கோயிலில் குறிஞ்சி பெருமுக திருவிழா

குறிஞ்சி பெருமுக திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு இந்து குறவன், மலைக்குறவன் அமைப்பினா் வெள்ளிக்கிழமை குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமிக்கு சீா்வரிசைப் பொருள்கள் கொண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினா். தமி... மேலும் பார்க்க

செவிலிமேடு செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் அமைந்துள்ள செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் பாலாற்றங்கரையின் வடக்கே அமைந்துள்ளது ஸ்ரீ செல்லியம்மன... மேலும் பார்க்க

1,008-ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா: ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம்

ராமாநுஜரின் 1008-ஆவது ஆண்டு அவதார திருவிழாவின் 10-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஈரவாடை தீா்த்தம், திருப்பாவை சேவை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதி... மேலும் பார்க்க