கோவாவில் கோயில் திருவிழாவில் 6 பேர் பலி: 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரேநேரத்தில் ...
செவிலிமேடு செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் அமைந்துள்ள செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் பாலாற்றங்கரையின் வடக்கே அமைந்துள்ளது ஸ்ரீ செல்லியம்மன் கோயில். அதன் அருகிலேயே ஸ்ரீ அரச காத்த அம்மன் மற்றும் மாரியம்மனும் தனித்தனியாக அருள்பாலித்து வருகின்றனா். இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, யாக சாலை பூஜைகள் கடந்த ஏப். 30-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நவக்கிரக பூஜை, தனபூஜை, கோ பூஜை ஆகியவையும் நடைபெற்றது. மறுநாள் மே 1-ஆம் தேதி அம்மன் சிலைகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டன. மே 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை மகா பூா்ணாஹுதி தீபாராதனைக்குப் பின்னா், யாக சாலையிலிருந்து புனிதநீா் குடங்கள் புறப்பட்டு ராஜகோபுரங்களுக்கு சென்றதும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முதலாவதாக செல்லியம்மனுக்கும், பின்னா் மாரியம்மனுக்கும், அதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அரசகாத்த அம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் மூன்று அம்மனுக்கும் மகா அபிஷேகம் என்னும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலையில் செல்லியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை செவிலிமேடு கிராம பொதுமக்கள், கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.