செய்திகள் :

ஒரு குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த உயிரைப் பணயம் வைத்து சென்ற செவிலியர் - குவியும் பாராட்டுகள்!

post image

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக காட்டாற்று வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் செவிலியரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

காதைக் கிழிலும் இரைசலோடு பாய்ந்தோடும் ஆற்றுக்கு இடையில் தனது செருப்பை ஒரு கையில் பிடித்துக்கொண்டு பாறை பாறையாக தாவிச் செல்கிறார் கமலா தேவி என்ற அந்த 40 வயது செவிலியர்.

Himachal Pradesh (File Image)
Himachal Pradesh (File Image)

மண்டி மாவட்டத்தில் உள்ள ஸ்வாட் என்ற நீர்நிலையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துக்குப் பேட்டியளித்த கமலா தேவி, "நான் அந்த குழந்தையைப் பற்றி கவலைகொண்டேன். வானிலை காரணமாக அம்மாவால் தடுப்பு மருந்து பெற்றுக்கொள்ள வரமுடியவில்லை. அதனால் நான் அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன்." எனக் கூறியுள்ளார்.

பதார் தாலுகாவின் சுதாரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரிகிறார் கமலா தேவி. இவருக்கு ஸ்வார் துணை சுகாதார நிலையத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் இருந்த குழந்தைக்கு தடுப்பூசி வழங்குவது தனது பொறுப்பாகிவிட்டது எனக் கூறியுள்ளார்.

"குழந்தையின் நோய்தடுப்பு அட்டவணையைத் தவிர வேறெதுவும் என் கவனத்தில் இல்லை. எனக்கு யார் வீடியோ எடுத்தது எனத் தெரியவில்லை. அது வைரலானது முதல் நான் ஃபோன் கால்களுக்கு பதிலளித்துக்கொண்டே இருக்கிறேம். சிலர் வாழ்த்துகிறார்கள், சிலர் பாராட்டுகிறார்கள்" என்றும் பேசியிருக்கிறார்.

தலைமை மருத்துவ அதிகாரி தீபாலி சர்மா, கமலா தேவியின் துணிச்சலைப் பாராட்டினாலும், மறுத்து ஊழியர்கள் இதுபோன்ற ரிஸ்க்குகளை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். "யாரையாவது சென்றடைய முடியாத சூழல் இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். அவர்களை அடைவதற்கான வசதிகளை எற்பாடு செய்ய முடியும்" எனப் பேசியுள்ளார் தீபாலி.

Diamond Hunting: ஆந்திராவில் `வைர வேட்டை' - மழைக்காலங்களில் கிடைக்கும் வைரம்? -படையெடுக்கும் மக்கள்

ஆந்திராவின் வைரம் விளையும் மண்ணாக ராயலசீமா கருதப்படுகிறது. ராயலசீமா பகுதியில் பெய்து வரும் மழை, கர்னூல், அனந்தபூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கிராமவாசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடும் பருவமாக மாறி... மேலும் பார்க்க

`குருவாயூர் கோயில் குளத்தில் கால் கழுவி ரீல்ஸ் எடுத்த பிக்பாஸ் ஜாஸ்மீன் ' - புனிதப்படுத்த சடங்கு

பியூட்டி & லைஃப் ஸ்டைல் வீடியோக்களின் மூலம் புகழ்பெற்றவர் ஜாஸ்மீன் ஜாபர். மலையாள பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொண்டு மூன்றாமிடம் பிடித்து செய்திகளிலும், ஊடகங்களிலும் வைரலானவர். தொடர்ந்து சமூக ஊடகங்கள... மேலும் பார்க்க

மும்பை: விநாயகர் சதுர்த்திக்கு இலவச பஸ், ரயில், உணவு; தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் போட்டி

மும்பை கொங்கன் பகுதிமகாராஷ்டிராவில் வரும் புதன் கிழமை விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குகிறது. இவ்விழாவிற்காக மும்பையில் இருந்து மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதிக்கு லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊருக்... மேலும் பார்க்க

அம்மா உடன் முதல் விமானப் பயணம்: "நீங்கள் இல்லாமல் நான் இல்லை" - நெகிழ்ந்த விமானி!

ஆந்திராவைச் சேர்ந்த விமானி ஒருவர், பயணிகள் முன்னிலையில் பைலட் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற ஆதரவு அளித்ததற்காக தனது தாய்க்கு நன்றி தெரிவித்து பெருமைப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது. ... மேலும் பார்க்க

விநாயகர் விசர்ஜனம்: ``மண்சிலைக்கு திரும்பினாதான் எங்க வாழ்க்கையும், பூமியும் நல்லா இருக்கும்''

மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாறு, பட்டு கண்ணம் செஞ்ச மண்ணு அது பொன்னூறு, காது செஞ்ச மண்ணு அது மேலூறு…அடடா இப்பெல்லாம் எங்க மண்ணில் சிலை செய்வாங்க?, இந்த காலத்துல போய் மண்ணை மிதிச்சு ரெடி பண்ணி நாள் கணக்க... மேலும் பார்க்க

Viral Video: ''அவரின் புன்னகை ஒரு மந்திரம்'' - Instagram-ல் வைரலாகும் பாட்டி வீடியோ; பின்னணி என்ன?

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை உருக்கியது. அதைப் பகிர்ந்தவர் கான்டென்ட் கிரியேட்டர் சஞ்சிதா அகர்வால். அந்த வீடியோவில், சஞ்சிதா தனது காரை ஓட்டி கொண்டி... மேலும் பார்க்க