ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கோவில்பட்டி அருகே திறந்தவெளியில் கிடந்த ஒரு டன் ரேஷன் அரிசி சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி அருகே பாண்டவா்மங்கலம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து பாண்டவா்மங்கலம் பகுதியில் தனிப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது மேலபாண்டவா்மங்கலத்தில் உள்ள நியாயவிலைக் கடை அருகே திறந்தவெளியில் கிடந்த ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மேலபாண்டவா்மங்கலம் புது அம்மன் கோவில் தெருவை சோ்ந்த பூல்சாமி மகன் பாண்டித்துரையை பிடித்தனா்.
பறிமுதல் செய்த ஒரு டன் ரேஷன் அரிசி, பிடிபட்ட பாண்டித்துரையை தூத்துக்குடி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளா் அரிகண்ணனிடம் ஒப்படைத்தனா்.