பறந்து போ விமர்சனம்: மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு... நம்மையும் பறக்க அழைக்கும்...
ஒரே நாளில் இரு மாணவர்கள் கொலை? திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
ஒரே நாளில் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் 13 வயதான ரோகித் என்ற சிறுவன் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் ஆதித்யா, பள்ளிக்கு அருகில் சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில், இரு சம்பவத்துக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எங்கும், எப்போதும், யாருக்கும், யாராலும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது. 13 வயது சிறுவனை காரில் கடத்தி கொலை செய்யும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு அச்சமற்ற நிலை இருப்பது என்பது, காவல்துறையை நிர்வகிக்க வேண்டிய முதல்வருக்கு உறுத்தவில்லையா?
மாணவர்கள் இடையிலான மோதலில் ஈரோடு ஆதித்யா உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன. மாணவர்கள் இடையே எப்படி இவ்வளவு வன்முறை உணர்வு வருகிறது? அடிப்படையிலேயே குறைபாடு கொண்ட அரசாக இந்த திமுக அரசு இருப்பதையே இத்தகைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
இன்று என்ன போட்டோஷூட் எடுக்கலாம்? என்பதில் மட்டும் இருக்கும் சிந்தையை, இன்று எப்படி முறையாக அரசை நிர்வகிக்கலாம்? என்பதில் மாற்ற வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்வதோடு, மேற்கூறிய சம்பவங்களில் குற்றம் இழைத்தோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, 13 வயதான ரோகித் என்ற சிறுவன் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும்,
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) July 3, 2025
ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் ஆதித்யா, நேற்று மாலை பள்ளிக்கு அருகில் உயிரிழந்து கண்டறியப்பட்டதாகவும் வரும் செய்திகள்…
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகேயுள்ள மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் - மஞ்சு தம்பதியினரின் மகன் ரோகித் (13) புதன்கிழமை மாலை 4 மணியளவில் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு விட்டதாக, காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், 5 கி.மீ. தொலைவில் வனப்பகுதியில் சிறுவனின் சடலம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, சிறுவனின் பெற்றோர் உள்பட உறவினர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் 2 சிறுவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று மாலை 8 மணியளவில் சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இருப்பினும், தனது காதலருடன் இளம்பெண் இருப்பதை சிறுவன் கண்டதால்தான், வெளியே சொல்லிவிடக் கூடாது என்பதற்காக சிறுவனை அடித்தே கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஈரோடு மாவட்டம் குமல்ன்குட்டை பகுதியில் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கிடையேயான மோதலில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஆதித்யா உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மாணவரைத் தாக்கியதாகக் கூறப்படும் இரு மாணவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
EPS questions DMK Govt