செய்திகள் :

"ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு; காவல்துறைக்கு முழு சுதந்திரம் வேண்டும்" - அண்ணாமலை காட்டம்

post image
சென்னையில் ஒரே நாளில் எட்டு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் எனவும், காவல்துறையும் தி.மு.க-வின் அதிகார துஷ்பிரயோகங்களைப் புறக்கணித்துவிட்டு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.

எக்ஸ் தளத்தில் அண்ணாமலை, ``சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட எட்டு இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர், சீருடையில் இருக்கும்போதே அவரது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு சென்றிருக்கின்றனர்.

ஸ்டாலின், அண்ணாமலை
ஸ்டாலின், அண்ணாமலை

தி.மு.க அரசு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் பா.ஜ.க தொண்டர்களைப் பின்தொடர்வதையே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியதன் விளைவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண் காவலரிடமே செயின் பறிப்புச் சம்பவம் நடக்கும் அளவுக்கு, தமிழக மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

தி.மு.க அரசு, இனியும் காவல்துறையினரை, அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சமூக விரோதிகளுக்கு எதிராக, காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். காவல்துறையினரும், தி.மு.க-வின் அதிகார துஷ்பிரயோகங்களைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் முதற் கடமையான சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/VaigainathiNaagarigam

``காதலிக்க பைக் வேண்டும்'' - நகையை திருடி டூவீலர் வாங்கிய வாலிபர்... தாய் உள்பட 3பேர் கைது!

ஸ்ரீவில்லிபுத்தூரில், காதலியின் கவனத்தை ஈர்ப்பதற்காக, நகை திருடி, அதை அடகு வைத்த பணத்தில் விலையுயர்ந்த டூவீலர் வாங்கிய இளைஞர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தாய் மற்றும் சித்தி ஆகியோரை போலீஸார் ... மேலும் பார்க்க

கரூர்: பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை; போக்சோவில் காவலர் கைது; நடந்தது என்ன?

கரூர் நகரக் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் நெரூர் ரங்கநாதன்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளவரசன் (வயது 41). இவர், பணி நிமித்தமாக வெங்கமேடு காவல் நிலை... மேலும் பார்க்க

"போலீஸ் கண் முன்னாடியே வெட்டி கொன்னுட்டாங்களே..." - பெரம்பலூரை உலுக்கிய படுகொலை சம்பவம்

பெரம்​பலூர் மாவட்டம், வேப்​பந்​தட்டை வட்டம் கை.களத்​தூர் காந்தி நகரைச் சேர்ந்​தவர் மணிகண்​டன்​ (வயது 32). அதே பகுதியைச் சேர்ந்​தவர் தேவேந்​திரன்​ (வயது 30). இருவரும் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வைத்... மேலும் பார்க்க

ரவுடியுடன் பொங்கல் விழா கொண்டாடிய 3 போலீஸார்... ஆயுதப்படைக்குத் தூக்கியடித்த திருப்பத்தூர் எஸ்.பி!

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி காவல் நிலையத்தில் கடந்த 14-ம் தேதி `சமத்துவ பொங்கல் விழா’ கொண்டாடப்பட்டது.இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, அஜித்குமார் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி உள்பட... மேலும் பார்க்க

வேலூர்: "குளிக்கிறப்ப வீடியோ கால் பண்ணு..." - மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது

வேலூர் கொணவட்டம் மதினாநகரைச் சேர்ந்தவர் முகமது சானேகா (35). இவர் தனியார்ப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரிடம் மாலை வீட்டுக்குச்... மேலும் பார்க்க

கியர்பாக்ஸ் முதல் டயர் வரை மாயம் - ஸ்டேஷன் பாதுகாப்பில் இருந்த விவசாயியின் பறிமுதல் வாகன பரிதாபம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள சோலூர் கோக்கால் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி நாகராஜ். கடந்த 2020 - ம் ஆண்டு அந்த பகுதியில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்ட நிலையில், அருகில் இருக்கும் தனியாருக்கு ... மேலும் பார்க்க