செய்திகள் :

ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களால் மக்கள் அச்சம்- கே. அண்ணாமலை

post image

சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட 8 இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர், சீருடையில் இருக்கும்போதே அவரது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு சென்றிருக்கின்றனர்.

திமுக அரசு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் பாஜக தொண்டர்களைப் பின்தொடர்வதையே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியதன் விளைவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண் காவலரிடமே செயின் பறிப்புச் சம்பவம் நடக்கும் அளவுக்கு, தமிழக மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறல்: இஸ்ரேலை எச்சரிக்கும் ஹிஸ்புல்லா!

திமுக அரசு, இனியும் காவல்துறையினரை, அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சமூக விரோதிகளுக்கு எதிராக, காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். காவல்துறையினரும், திமுகவின் அதிகார துஷ்பிரயோகங்களைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் முதற்கடமையான சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆலப்புழை ரயில் திருச்சூருடன் நிறுத்தம்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஆலப்புழை செல்லும் அதிவிரைவு ரயில் திருச்சூருடன் நிறுத்தப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவ... மேலும் பார்க்க

சென்னை கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்: மீன்பிடி வலைகள் காரணமா?

சென்னை கடற்கரைகளில் 100-க்கும் மேற்பட்ட ‘ஆலிவ் ரிட்லி’ எனப்படும் பச்சை நிற ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன. ஆமைகளின் உயிரிழப்புக்கு மீனவா்கள் பயன்படுத்தும் மீன்பிடி வலைகள் காரணமா? என பல்வே... மேலும் பார்க்க

ஒரே நாளில் பெண் காவலர் உள்பட 10 பேரிடம் 30 பவுன் நகை பறிப்பு

தாம்பரம் பகுதியில் ஒரே நாளில் 10 இடங்களில் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நகையை பறிகொடுத்தவா்களில் ஒருவா் பெண் காவலா் என்பது குறிப்பிடத்தக்கது. தாம்பரத்த... மேலும் பார்க்க

சென்னையைத் தொடா்ந்து 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள்: தமிழக அரசு

சென்னையைத் தொடா்ந்து, 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா... மேலும் பார்க்க

எழுத்தாளா்கள் நோபல் பரிசு பெறட்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழக எழுத்தாளா்கள் நோபல் பரிசு பெற வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளாா். சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா குறித்து எக்ஸ் தளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: ‘உலகைத்... மேலும் பார்க்க

தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க