உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்: முதல்வர் மீண்டும் கோரிக்கை
`ஒரே ஸ்டேஷனில் 13 போலீஸார் பணியிட மாற்றம்' - திருச்சி எஸ்.பி அதிரடி.. காரணம் என்ன?
திருச்சி மாவட்டம், கரூர் சாலையில் உள்ளது ஜீயபுரம். இங்குள்ள காவல் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக உள்ள போலீஸார், உள்ளூர் பிரச்னைகளில் தலையிடுவது, அதை பெரிதாக்குவது, ஒருதரப்புக்கு ஆதரவாக செயல்படுவது ஆகிய செயல்களில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் திருச்சி எஸ்.பி அலுவலகத்துக்கு சென்றதாகச் சொல்லப்படுகிறது. இதனை, உயரதிகாரிகள் பலமுறை கண்டித்தும், அவர்களில் பலர் தங்களது அத்தகைய நடவடிக்கையில் இருந்து மாறவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஜீயபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பாஸ்கர், கோபி, விஜய், ராஜமாணிக்கம், செந்தில்குமார் ஆகியோர் திருவெறும்பூர் காவல் நிலையத்துக்கும், செல்லதுரை, ராஜாங்கம், தம்புசாமி ஆகியோர் கொள்ளிடம் காவல் நிலையத்துக்கும், அருண்குமார், சதீஷ்குமார், முத்தழகன் ஆகியோர் சமயபுரம் காவல் நிலையத்துக்கும், கலைவாணி ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் பணியிடை மாற்றம் செய்து திருச்சி எஸ்.பி. செல்வநாகரத்தினம் முன்தினம் உத்தரவிட்டுள்ளார். ஒரே ஸ்டேஷனை சேர்ந்த 13 போலீஸார் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம், திருச்சி மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks