ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆலோசனை
ஒலி அலையால் உடல் எடையைக் குறைக்க முடியுமா? ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன?
பொதுவாக உடலைக் குறைக்க, உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு எனப் பல விஷயங்களைச் செய்வார்கள். ஆனால் ஒலி அலைகளால் உடலைக் குறைக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் ஒலி அலைகள் (sound wave) மூலம் உடல் எடையைக் குறைக்க வாய்ப்பு உள்ளதாக ஒரு ஆச்சரிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
ஜப்பானின் கம்யூனிகேஷன் பயாலஜி இதழில் வெளியிட்ட தகவலின் படி, புதிய ஆய்வில் ஒலி அலைகளை உடலில் செலுத்துவதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பு வளர்ச்சியைத் தடுக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக ஒலி, திசுக்களின் வழியாகக் கடந்து செல்லும், எனவே முதலில் வளர்க்கப்பட்ட செல்களில் குறிப்பிட்ட ஒலி அளவை வைத்துப் பரிசோதித்தனர்.
அதன் பின்னர் எலிகளின் தசை செல்களில் 440 ஹெர்ட்ஸ் மற்றும் 14khz அளவு கொண்ட ஒலி அலைகளை மூலம் பரிசோதனை நடத்தினர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு எலிகளின் தசைகளில் உள்ள 42 மரபணுக்கள் மாறியதாகவும், 24 மணி நேரத்திற்குப் பிறகு 145 மரபணுக்கள் மாறியதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த ஒலி சோதனை மூலம், கொழுப்பைச் சேமிக்கும் செல்களில் 15 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். இந்த சோதனை ஆரம்ப நிலையில்தான் உள்ளது எனவும் கூறியுள்ளனர்.
தற்போது ஒலி சிகிச்சை வலியைக் குறைக்க மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு வேளை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களின் சோதனை வெற்றி அடைந்தால் ஒலி சிகிச்சை மூலமே உடலைக் குறைக்க வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs