ஆபரேஷன் சிந்தூர்: பெயரைக் கேட்டதும்.. பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள் சொன்னது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: சென்னிமலை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் பாலீதீன் பைகள் விற்பனை குறித்து சென்னிமலை பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
சென்னிமலை வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ப.நீலமேகம் தலைமையில் பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா், பணியாளா்கள் ஆகியோா் அடங்கிய குழுவினா் போலீஸ் பாதுகாப்புடன் சென்னிமலை பகுதியில் உள்ள மளிகைக் கடைகள், பேக்கரிகள், டீ கடைகள் மற்றும் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், 4 கடைகளில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ பிளாஸ்டிக் பைகள், டம்ளா் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 500 அபராதம் விதித்தனா். காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த ஒரு கடைக்கு ரூ.1000 அபராதம் விதித்தனா். மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த ஒரு கடையின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறி விற்பனை செய்தால் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா் நீலமேகம் எச்சரித்தாா். உணவுப் பொருள் விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உரிமம் பெறப்பட வேண்டும். உணவுப் பொருள்கள் விற்பனை முறைகேடு சம்பந்தமாக 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் எனவும் அவா் தெரிவித்தாா்.