செய்திகள் :

இந்திய - பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம்: அமெரிக்கா அறிவுறுத்தல்!

post image

தாக்குதல் நடக்கும் இந்திய - பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க மக்களுக்கு அந்த நாட்டு வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு தாக்குதல் நடத்தியது. முன்னதாக பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்தும் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தனர்.

இந்திய ராணுவத்தின் பதில் தாக்குதலையடுத்து எல்லையில் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

"பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலினால் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. எனவே, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடந்த பகுதிகளைச் சுற்றி இருக்கும் அமெரிக்கர்கள் அவ்விடத்தைவிட்டுச் செல்ல வேண்டும்.

அதேபோல, இந்திய - பாகிஸ்தான் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம். பாகிஸ்தான் பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்.

வான்வெளியும் மூடப்பட்டுள்ளதால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய - பாகிஸ்தான் தாக்குதல் குறித்து நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்" என்று கூறியுள்ளது.

அதேபோல அமெரிக்க வெளியுறவுத்துறையும் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தாக்குதல் நடக்கும் பகுதிகளைவிட்டு அமெரிக்க மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க | 'நாம் யாருமே போரை விரும்பவில்லை; ஆனால்...' - ஒமர் அப்துல்லா கருத்து

பாகிஸ்தான்: இந்திய யூடியூப் சேனல்கள் முடக்கம்

பாகிஸ்தானில் இந்திய யூடியூப் சேனல்களை அந்நாட்டு அரசு தடை செய்தது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான்... மேலும் பார்க்க

இந்தியாவின் பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவின் தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ராணுவம் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்,... மேலும் பார்க்க

முதல்முறையாக ஐரோப்பிய பயணம் மேற்கொள்ளும் சிரியாவின் இடைக்கால அதிபர்!

சிரியாவின் இடைக்கால அதிபர் முதல்முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிரியா நாட்டை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுவந்த அஸாத் குடும்பத்தின் ஆட்சி உள்நாட்டுப் போரின் மூலம் கவிழ்க்கப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கம்!

பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கப்பட்டது.பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி, கடந்தாண்டில் எக்ஸ் தளத்தை முடக்கம் செய்து, அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்தியாவின்... மேலும் பார்க்க

கென்யா: 5,000 எறும்புகள் கடத்திய 2 வெளிநாட்டவருக்கு ஓராண்டு சிறை! ரூ.6.5 லட்சம் அபராதம்!

கென்யா நாட்டில் சுமார் 5,000 எறும்புகளைக் கடத்திய வெளிநாட்டவர்களுக்கு ரூ. 6.5 லட்சம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கென்யாவில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லார்னாய் டேவிட... மேலும் பார்க்க

பூமியே அதிரும் அறிவிப்பை வெளியிடப்போகிறேன்: டிரம்ப் பேச்சால் அதிர்ந்த இணையம்!

பூமியை அதிர வைக்கும் வகையிலான ஒரு அறிவிப்பை ஒரு சில நாள்களில் வெளியிடவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் பார்க்க