செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்: பெயரைக் கேட்டதும்.. பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள் சொன்னது

post image

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய முப்படைகளும் ஒருங்கிணைந்து நடத்திய தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது குறித்து பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள், தனிப்பட்ட முறையில் தொடர்புடைய தாக்குதலாக உணர்ந்ததாகக் கூறியிருக்கிறார்கள்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது, குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்த இந்துக்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நீங்கள் என்ன மதம் என்று கேட்டு, ஹிந்து என்று சொன்னதும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்தனர். இதில் ஆண்களை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், தங்கள் கண் முன்னே கணவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்த பெண்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகினர்.

இவர்களது கண்ணீருக்கு பதில் சொல்லும் வகையிலும், இவர்கள் இழந்த குங்குமத்துக்கு பதிலடி கொடுக்கும்வகையிலும் நடத்தப்பட்ட இந்த அதிரத் தாக்குதலுக்கு குறியீடாக சிந்தூர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 22ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத்தாக்குதலில் பலியான ஷூபம் திவேதியின் மனைவி ஐஷன்யா திவேதி, இந்த தாக்குதல் நடத்திய இந்திய முப்படைகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிடப்பட்டிருப்பதால், தனிப்பட்ட முறையில், தனக்கு ஒரு தொடர்பு ஏற்பட்டிருப்பதாகவும், செய்தியை தொலைக்காட்சியில் பார்த்ததுமே, நான் கதறி அழுதேன், இந்த தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிட்டிருப்பது, எங்கள் சார்பாக இந்தியா எடுத்த நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இதுபோலவே, பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினரும், சிந்தூர் தாக்குதல் நடத்திய மத்திய அரசுடன் ஒட்டுமொத்த நாடும் உறுதுணையாக நிற்கும். பஹல்காம் தாக்குதல் போன்று இனி நடைபெறாத வகையில் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

‘ஆபரேஷன் சிந்தூா்’ பஹல்காம் தாக்குதலுக்கு பாரதத்தின் பதிலடி -அமித் ஷா

‘பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ எனும் அதிதுல்லியத் தாக்குதல், பஹல்காமில் நமது அப்பாவி சகோதரா்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி’ என்று மத்திய... மேலும் பார்க்க

இந்திய ஆயுதப் படைகளை எண்ணி பெருமிதம்: காங்கிரஸ்

இந்திய ஆயுதப் படைகளை எண்ணி பெருமிதம் கொள்வதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் புகைப்படங்களை சமா்ப்பிக்க என்ஐஏ வேண்டுகோள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான புகைப்படங்கள், காணொலிகள் இருந்தால் அதை தங்களிடம் சமா்ப்பிக்கலாம் என சுற்றுலாப் பயணிகள், உள்ளூா் மக்களுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை தெரிவித்தது. ... மேலும் பார்க்க

சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு

சிபிஐ இயக்குநா் பிரவீண் சூட்டின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. சிபிஐ இயக்குநராக 2 ஆண்டு பதவிக் காலத்துக்கு பிரவீண் சூட், கடந்த 2023-ஆம் ஆண்டு மே மா... மேலும் பார்க்க

பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை

நாட்டின் எல்லையோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதசேங்களில் எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையிலான பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுடன் போா்ப் ... மேலும் பார்க்க

அதிதுல்லிய தாக்குதலில் இலக்குகள் அழிப்பு: ஆயுதப் படைகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் கீழ் நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளான பயங்கரவாத முகாம்கள் திட்டமிட்டபடி அதிதுல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டன’ என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க