இந்திய ராணுவத்துக்கு ராயல் சல்யூட்: விஜய்
இந்திய பாதுகாப்புப் படையின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்திய ராணுவத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ”இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.