செய்திகள் :

ஒவ்வொரு நிமிடமும் கோடி ரூபாய் கடன் வாங்கும் தெலங்கானா: பாஜக குற்றச்சாட்டு

post image

தெலங்கானாவில் மாநில அரசின் கடன் வாங்கும் போக்கால், தனிநபர் கடன் சுமை அதிகரித்துள்ளதாக பாஜக தலைவர் மகேஷ்வர் ரெட்டி குற்றம் சாட்டினார்.

தெலங்கானா சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மேற்கொள்ளப்பட்டது. விவாதத்தில், பாஜக தலைவர் மகேஷ்வர் ரெட்டி கூறியதாவது, ``ரேவந்த் ரெட்டி தலைமையிலான மாநில அரசு, நாள்தோறும் ரூ. 1,700 கோடி வாங்குவதன் மூலம், அதன் மொத்தக் கடனை ரூ. 8.6 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது.

ரேவந்த் ரெட்டி அரசு, ஒரு நிமிடத்துக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வாங்குவதால், தனிநபர் கடன் சுமை தற்போது ரூ. 2.27 லட்சமாக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க:யாருடன் கூட்டணி? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 32 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்திய போதிலும், கடன் வாங்கும் போக்கை மாநில அரசு நிறுத்தவில்லை’’ என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தெலங்கானாவுக்கு புதிய திட்டங்களோ நிதியோ ஒதுக்காமல் பாஜக அரசு தவறி விட்டதாக காங்கிரஸ் உறுப்பினர்கள், எம்.பி.க்களும் கூறினர்.

இருப்பினும், தங்கள் தோல்வியை மறைக்க, காங்கிரஸார் திசைதிருப்ப முயற்சிக்கின்றனர் என்று மகேஷ்வர் கூறினார்.

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 44% அதிகரிப்பு!

நாடு முழுவதும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 44% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி 250 கோடி பேர் உள்நாட்டில் சுற்றுலா சென்றுள்ளதாகவும், இதில் சுற்றுல... மேலும் பார்க்க

ஏப். 14-ல் ஹரியாணா செல்கிறார் பிரதமர் மோடி!

புதிய விமான நிலையம் திறப்பதற்காக ஏப். 14ஆம் தேதி ஹரியாணா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை!

தீவிபத்தின்போது கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை தில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.மாா... மேலும் பார்க்க

மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவிலான செயற்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

புது தில்லி: உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது நாடெங்கிலும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவற்றைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக மாணவர்களின் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு: வெளியானது அறிவிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், படிகள், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை உயர்த்தி வழங்குவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரு... மேலும் பார்க்க

'ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி இருந்தால் இந்த நாடு அழிந்துவிடும்' - ராகுல் காந்தி

ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி முறை இருந்தால் இந்த நாடு அழிந்துவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். தில்லியில் புதிய கல்விக் கொள்கை, யுஜிசியின் புதிய விதிகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்டவ... மேலும் பார்க்க