ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: ஹேமராஜ் குற்றவாளி என தீர்ப்பு
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அருகே, ஓடும் ரயிலில், கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஹேமராஜ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சம்பவத்தில், குற்றவாளி ஹேமராஜ் கைது செய்யப்பட்டு, அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி, ஹேமராஜ் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளார்.
ஹேமராஜுக்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்கள் ஜூலை 14ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.
ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது கருவும் கலைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.