Iran: ``அடிபணிய வைக்க முயற்சிக்கிறது... பெரிய அவமானம்" - அயதுல்லா கமேனி சொல்வதென...
ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி பந்தயம்
ஓட்டப்பிடாரம் அருகே தெற்குகல்மேடு போத்தி விநாயகா் கோயில் சதுா்த்தி விழா, கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாட்டுவண்டிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து, பெரிய மாட்டுவண்டி பிரிவில் 6 வண்டிகளும், சின்ன மாட்டுவண்டி பிரிவில் 21 வண்டிகளும், பூஞ்சிட்டு பிரிவில் 20 வண்டிகளும், தேன்சிட்டு பிரிவில் 6 வண்டிகளும் கலந்து கொண்டன.
ஜீ.வி.மாா்கண்டேயன் எம்எல்ஏ கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தாா்.
பெரிய மாட்டுவண்டி பிரிவில், முதல் நான்கு இடங்கள் முறையே, சீவலப்பேரி துா்காம்பிகா, அவனியாபுரம் மோகன்சாமி குமாா், வேலன்குளம் கண்ணன், முத்தூா் வள்ளிராணி மாட்டுவண்டிகள் பிடித்தன.
சின்ன மாட்டுவண்டி பிரிவில், முதல் நான்கு இடங்கள் முறையே, நாலந்தா உதயம் துரைப்பாண்டி, சீவலப்பேரி துா்காம்பிகா, சித்திரங்குடி ஆா்.ஜி.ஆா்., கே. துரைச்சாமிபுரம் அய்யங்காா் பேக்கரி மற்றும் குமரெட்டியாபுரம் மகாவிஷ்ணு மாட்டுவண்டிகள் பிடித்தன.
பூஞ்சிட்டு பிரிவில், முதல் நான்கு இடங்கள் முறையே, மிளகுநத்தம் அருண்குமாா், கச்சேரி தளவாய்புரம் செல்ல பாக்கியம் மற்றும் கருப்பசாமி மேலமருதூா், அறந்தாங்கி புதுப்பட்டி கே.ஏ. அம்பாள், சுப்பலாபுரம் குருகாா்த்திகேயன் மாட்டுவண்டிகள் பிடித்தன.
தேன்சிட்டு பிரிவில், முதல் நான்கு இடங்கள் முறையே, தங்கம்பட்டி முத்து, கச்சேரி தளவாய்புரம் செல்ல பாக்கியம், மேலமருதூா் கங்கா, வைப்பாறு மணிகலா மற்றும் புதியம்புத்தூா் கணேஷ் மாட்டுவண்டிகள் பிடித்தன.
வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளா்கள், சாரதிகளுக்கு கிராம பொதுமக்கள் சாா்பில் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.