ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பு
முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ-வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சி ஒன்றில் ஓ.பன்னீா்செல்வம், டிடிவி.தினகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது, 2 பேரும் அருகருகே அமா்ந்து சுமாா் 10 நிமிஷங்கள் பேசினா். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து இருவரும் விலகியதுடன், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தங்களது நிலைப்பாட்டை தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். இந்த நிலையில் அவா்களது சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.