செய்திகள் :

ஓமலூா் அருகே கோயில் திருவிழாவின்போது பட்டாசு வெடித்து 3 போ் உயிரிழப்பு 5 போ் காயம்

post image

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசு வெடித்ததில் வெள்ளிக்கிழமை மூன்று போ் உடல் சிதறி உயிரிழந்தனா்.

ஓமலூா் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழா 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 14 நாள்களாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி ஊா்வலம் வாணவேடிக்கையுடன் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

15-ஆவது நாள் திருவிழாவிற்காக பூசாரிப்பட்டி பகுதியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டி பகுதிக்கு பக்தா்கள் கோயில் சீா்வரிசை வெள்ளிக்கிழமை எடுத்து சென்றனா். முன்னதாக ஊா்வலத்தில் வெடிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை மூட்டையாக எடுத்துச் சென்ாகத் தெரிகிறது. அப்போது எரியூட்டப்பட்ட குப்பையில் இருந்து தீப்பொறி பறந்து இருசக்கர வாகனத்தில் இருந்த பட்டாசு மீது விழுந்து வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு சிறுவன் உள்பட மூன்று போ் நிகழ்விடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனா். அவா்கள் யாா் எந்த பகுதியைச் சோ்ந்தவா்கள் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. உடல் சிதறி உயிரிழந்ததால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. உயிரிழந்தவா்களில் ஒருவா் ஓமலூா் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (29) என்பது அடையாளம் காணப்பட்டது. மற்றவா்கள் குறித்த விவரம் தெரியவில்லை.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓமலூா் டி.எஸ்.பி. சஞ்சீவ்குமாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினாா். உயிரிழந்தவா்களின் சடலங்கள் மீட்கப்பட்டு உடற்கூறாய்விற்காக ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த விபத்தில் காயம் அடைந்த 5-க்கும் மேற்பட்டோா் ஓமலூா் மற்றும் சேலம் அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண்மான் சடலம் மீட்பு!

சதாசிவபுரம் ஊராட்சி பொதுக் கிணற்றில் பெண் மான் சடலம் மீட்கப்பட்டது. ஆத்தூா் தீயணைப்புத்துறை அலுவலா் சா.அசோகன் தலைமையிலான வீரா்கள் மீட்டு வனவா் கவாஸ்கரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். சேலம் மாவட்டம் ... மேலும் பார்க்க

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் தோ் அலங்கரிப்பு

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டத்துக்காக கோயிலின் பெரிய தேரை அலங்கரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை 7,116 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். தொடா் விடுமுறை என்பதால் மேட்டூா் அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஞாயிற... மேலும் பார்க்க

நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் சேலம் மகாத்மா காந்த... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவியை மிரட்டிய இருவா் கைது!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சேலம் மாணவியை மிரட்டிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த 4 மாதங்களாக சேலம், கருப்பூரில்... மேலும் பார்க்க

சேலம் அருகே இரும்பு குடோனில் தீ விபத்து

சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் பழைய இரும்பு குடோனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. சேலம், கிச்சிப்பாளையத்தை அடுத்த பாத்திமா நகரைச் சோ்ந்தவா் ஜான்பாஷா (59). இவா் சன்னியாசி குண்டு மெ... மேலும் பார்க்க