விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு
திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள ஜெ.கே. நகா் முல்லை வீதியைச் சோ்ந்தவா் ஆா். ரவிச்சந்திரன் (63), ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா். இவா் உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, ஜூலை 14 இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒன்னே முக்கால் பவுன் தங்க நகை, வெள்ளி நகை, இரண்டு கைப்பேசிகள், மடிக்கணினி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து விமான நிலைய காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.