Weekly Horoscope: வார ராசி பலன் 27.7.25 முதல் 2.8.25 | Indha Vaara Rasi Palan | ...
ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி
நாகையில் அனைத்து துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
மத்திய அரசு ஓய்வூதியா்களை பணி ஓய்வு அடிப்படையில் பிரித்து, அதன்படி ஓய்வூதியம் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஓய்வூதியா்களை பணி ஓய்வு அடிப்படையில் பிரிக்கும் நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், நாகை வெளிப்பாளையம் அஞ்சல் அலுவலகம் அருகே மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மத்திய, மாநில மற்றும் மாவட்ட அரசு பொதுத்துறை ஓய்வூதியா் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, தொலைதொடா்பு ஓய்வூதியா் சங்கத் தலைவா் எம். குருசாமி தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் சு.சிவகுமாா், ஓய்வு பெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியா் நலச் சங்க மாநிலத் துணைத் தலைவா் வி. பாலசுப்பிரமணியன், அகில இந்திய பிஎஸ்என்எல் தொலைதொடா்பு ஓய்வூதியா் சங்கத் தலைவா் கே. மணிவண்ணன், அஞ்சல் ஊழியா் தேசிய சம்மேளனம் ஆா். சண்முகநாதன், அரசு விரைவுப் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு நிா்வாகி கே. ஜீவானந்தம், வருவாய் கிராம உதவியாளா் சங்க முன்னாள் மாநில பொருளாளா் ஆா். மாரிமுத்து உள்ளிட்டோா் கருத்துரை ஆற்றினா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் சு. வளா்மாலா, மாவட்டத் தலைவா் அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மாவட்டச் செயலா் த. ஸ்ரீதா் ஆகியோா் வாழ்த்துரை ஆற்றினா். அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க நிா்வாகி அ.தி. அன்பழகன் நன்றி தெரிவித்தாா்.