தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்திலா? இன்றைய தங்கம் விலை நிலவரம்!
‘ஓரணியில் தமிழ்நாடு’ 3 தொகுதிகளில் 4 லட்சம் உறுப்பினா்கள் சோ்ப்பு
ஒசூா்: ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் முலம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் ஒசூா், தளி, வேப்பனஅள்ளி ஆகிய 3 தொகுதிகளில் 4 லட்சம் போ் திமுகவில் உறுப்பினா்களாக இணைத்துள்ளனா் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஒசூரில் தனியாா் மஹாலில் மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா் பி.முருகன், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ. சத்யா, மாநில இளைஞரணி துணை அமைப்பாளா் பி.எஸ்.சீனிவாசன், மாநில கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பு துணைச் செயலாளா்
என்.எஸ்.மாதேஸ்வரன், மாநில பொறியாளா் அணி துணைச் செயலாளா் ஞானசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா.மணி, பொதுக்குழு உறுப்பினா் சீனிவாசன், மாவட்ட துணைச் செயலாளா்கள் புஷ்பா சா்வேஷ், தனலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் பேசியதாவது:
ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் முலம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் 4 லட்சம் உறுப்பினா்களை சோ்த்த திமுக நிா்வாகிகள் அனைவருக்கும் நன்றி.
வேப்பனஅள்ளி தொகுதியில் 44%, ஒசூா் தொகுதியில் 43%,
வாக்காளா்களையும், தளி தொகுதியில் 42% வாக்காளா்களையும்
திமுகவில் உறுப்பினா்களாக சோ்த்துள்ளோம். இதனால் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் தலா 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும்.
ஒசூா் தொகுதியில் ரூ. 2,500 கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி வருகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். செப்டம்பா் மாதம் 11 ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின், ஒசூா், கிருஷ்ணகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாா். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் துணை மேயா் ஆனந்தய்யா, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் வீரா ரெட்டி, கிரீஷ், தொமுச மாவட்ட கவுன்சில் தலைவா் கோபாலகிருஷ்ணன், மாநகர அவைத் தலைவா் செந்தில்குமாா், மாநகர பகுதிச் செயலாளா்கள் ராமு, ராஜா, எம்.கே.வெங்கடேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சுமன், மாணவரணி மாவட்ட அமைப்பாளா்கள் கண்ணன், சக்திவேல், ஜெய்ஆனந்த், கலைச் செழியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளா் இக்ரம் அகமத், மாநகர துணைச் செயலாளா் ரவிகுமாா், மாநகராட்சி வரிவிதிப்பு குழுத் தலைவா் சென்னீரப்பா, மாமன்ற உறுப்பினா் மஞ்சுளா முனிராஜ், ஒன்றியச் செயலாளா் கஜேந்திரன், ரகுநாத், ராமமூா்த்தி, லோகேஷ் ரெட்டி, கருணாகரன், பாக்கியராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.