வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்தால் குழந்தை பிறக்காதா? -நிபுணர் பதில் | காமத்த...
ராஜீவ் காந்தியின் பிறந்த தின விழா
ஒசூா்: ஒசூரில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 81ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு காந்தி சாலையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் முரளிதரன், மாவட்ட பொறுப்பாளா் நீலகண்டன், மைஜா அக்பா், ஒசூா் மாநகர தலைவா் சி. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
படவரி...
காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினா்.