செய்திகள் :

"ஓ.பி.எஸ், முதல்வரை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்திருப்பார்" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

post image

மதுரை விளாங்குடியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்.

"அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ் வெளியேறிவிட்டாரே" என்ற கேள்விக்கு,

"அவர் அதிமுக கூட்டணியில் எங்கே இருந்தார்" என்றார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

கூட்டணி குறித்த கேள்விக்கு,

"கூட்டணி என்பது இறுதிக்கட்டத்தில்தான் முடிவாகும். திமுக, அதிமுக-வில் அப்படித்தான் எப்போதும் நடக்கும். வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணியை அதிமுக பயன்படுத்தி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். மக்கள் கடல் அலை போல திரண்டு வருகின்றனர். மக்கள் கடலில் எடப்பாடி பழனிசாமி நீந்தி வருகிறார்.

2026-ல் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவது உறுதியாகிவிட்டது. கிராமப்புறங்களில் கூட மக்கள் எழுச்சிகரமான வரவேற்பு கொடுக்கிறார்கள். அதிமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும், முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

பாஜகவோடு கூட்டணியில் இருக்கிறோம். எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெரிய பெரிய கட்சிகளோடு பேசுகிறோம், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனக் கூறியுள்ளார். எது எப்படி இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

1967-ல் நடைபெற்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், சுதந்திரக் கட்சி உள்ளிட்ட முரண்பாடான கட்சிகள் கூட்டணி அமைத்தனர். அதுபோல தேர்தல் நேரத்தில்தான் எல்லாமே முடிவாகும். சீட் பேரம், தொகுதி ஒதுக்கீடு என எல்லாமே உள்ளது. தேர்தல் நேரத்தில் கேட்ட தொகுதிகள் கிடைக்காமல் போகலாம், கூட்டணி மாறலாம், இப்படி நிறைய விஷயங்கள் உள்ளது." என்றவரிடம்,

"முதல்வரை ஓபிஎஸ் சந்தித்துள்ளாரே" என்ற கேள்விக்கு,

"ஓபிஎஸ் முதல்வரை எத்தனை முறை பார்த்தாலும் அது அவருடைய கொள்கை, மரியாதை நிமித்தமாக தான் சந்தித்து இருப்பார்." என்றார்.

ஏமன்: ஹௌதி பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி கொலை - யார் இவர்?

கடந்த ஆண்டு முதல் ஏமன் நாட்டில் இருக்கும் ஈரான் ஆதரவு பெறும் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது இஸ்ரேல். சமீபத்தில் நடந்த தாக்குதலில் ஏமனில் ஹௌதி கட்டுப்பாட்டில் உள... மேலும் பார்க்க

மாட்டுக்கறி சாப்பிட தடைவிதித்த வங்கி ரீஜினல் மேலாளர்; `பீப் பெஸ்ட்' போராட்டம் நடத்திய அதிகாரிகள்!

கேரள மாநிலம் கொச்சியில் கனரா வங்கி ரீஜினல் ஆபீஸ் செயல்பட்டு வருகிறது. அங்கு சிறிய அளவிலான கேண்டீன் ஒன்று செயல்படுகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்காக செயல்படும் அந்த கேண்டீனில் அவ்வப்போது மாட்டுக்... மேலும் பார்க்க

சம்பல் கலவரம்: `இந்துக்கள் 15% சரிவு, முன்பு தீவிரவாத தளம்' - விவாதங்களைக் கிளப்பிய விசாரணை அறிக்கை!

உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி நடந்த கலவரம் பற்றிய மூன்று நபர் விசாரணை குழுவின் அறிக்கை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.450 பக்கங்கள் கொண... மேலும் பார்க்க

``947 வாக்காளர்கள் ஒரே வீட்டில்..."- காங்கிரஸின் குற்றச்சாட்டும் தேர்தல் ஆணையத்தின் பதிலும்!

Aகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, ஒரே வீட்டில் பல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது, போலி முகவரிகள், மற்றும் இரட்டை... மேலும் பார்க்க

Modi: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி - பின்னணி என்ன?

2022-ம் ஆண்டு உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து இதுவரை ரஷ்யாவை இந்தியா வெளிப்படையாக விமர்சித்ததில்லை. ரஷ்யாவின் நடவடிக்கைகளை கண்டிக்கும் ஐ.நா. பொதுச் சபை தீர்மானங்களில் இந்தியா வாக்களிப்பதிலிருந... மேலும் பார்க்க