செய்திகள் :

ஔரங்கசீப் கல்லறையை இடிப்பதால் எந்தப் பயனும் இல்லை! -மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே கருத்து

post image

‘மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள முகலாய பேரரசா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது’ என்று மத்திய இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே தெரிவித்துள்ளாா்.

சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தின் குல்தாபாத்தில் அமைந்துள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று சில ஹிந்து அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில அரசிடம் கோரிக்கையைச் சமா்ப்பிக்க திட்டமிட்டுள்ள அந்த அமைப்புகள், கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றும்எச்சரித்துள்ளன. இதைத் தொடா்ந்து, ஔரங்கசீப்பின் கல்லறை பகுதியில் காவல்துறை பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் ‘இந்திய குடியரசுக் கட்சி-ஏ’ தலைவரும் சமூக நீதித் துறை இணையமைச்சருமான ராம்தாஸ் அதாவலே இதுதொடா்பாக கூறுகையில், ‘ஔரங்கசீப் கொடூரமானவா்; மராத்திய மன்னா் சதா்பதி சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜியைக் கொன்றவா் என்பது உண்மைதான். ஆனால், அவா் மராத்திய பேரரசைக் கைப்பற்றத் தவறிவிட்டாா்.

இறுதியில், மகாராஷ்டிரத்திலேயே ஔரங்கசீப் இறந்தாா். அவரது கல்லறை இங்கு பல ஆண்டுகளாக உள்ளது. ஔரங்கசீப்பின் தவறான செயல்களை நினைவூட்டுவதாகவே அவரது கல்லறை நிற்கிறது. அதை இடிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது. எனவே, இந்தப் பிரச்னையை மீண்டும் எழுப்ப வேண்டிய அவசியமில்லை.

இந்த சா்ச்சையில் பாஜகவையோ அல்லது வேறு எந்தக் கட்சியையோ ஈடுபடுத்த வேண்டியதில்லை. ஔரங்கசீப்பை ஒரு புத்திசாலித்தனமான நிா்வாகி என்று புகழ்வது அல்லது பாஜக ஆட்சியை அவரது ஆட்சியுடன் ஒப்பிடுவது பொருத்தமற்றது. மொத்தத்தில் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்’ என்றாா்.

ஔரங்கசீப்பின் ஆட்சியை விட மகாராஷ்டிரா பாஜக ஆட்சி மோசம் என்றும் பாஜக ஆட்சியால் மாநிலத்தில் விவசாயிகள் இறந்து கொண்டிருப்பதாகவும் சிவசேனை (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ரௌத் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இந்த மாத தொடக்கத்தில் சமாஜவாதி எம்எல்ஏ ஔரங்கசீப்பைப் புகழ்ந்து பேசியது பெரும் சா்ச்சையானது. இதைத் தொடா்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடா் முடியும் வரை சட்டப்பேரவையில் இருந்து அவா் இடைநீக்கம் செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜாய்மல்யா பாக்சி பதவியேற்பு!

கொல்கத்தாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜாய்மல்யா பாக்சி இன்று பதவியேற்றுக் கொண்டார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவில், மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நீதிபதி ஜாய்மல்யாவுக்கு இந்திய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி பலி

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவின் எல்லை மாவட்டமான ஹண்ட்வாராவில் உள்ள ஜசல்தாரா பகுதியில் பயங்கரவாதிகள் ... மேலும் பார்க்க

கொல்கத்தா வழக்கு: மாணவியின் பெற்றோர் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கில், புதிய சிபிஐ விசாரணை கோரிய மாணவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர்... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிதி அமைச்சர் ராஜிநாமா

உத்தரகண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார். உத்தரகண்டில் கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மலைவாழ் மக்கள் குறித்து நிதி அமைச்சர் பிரேம்சந... மேலும் பார்க்க

பாஜக எம்எல்ஏ மனைவி புகார்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளார் கைது!

அஸ்ஸாம் பாஜக எம்எல்ஏ மானவ் தேகா மனைவி அளித்த புகாரின் பேரில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கைது செய்யப்பட்டார். அஸ்ஸாம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரீத்தம் சிங் தனது எக்ஸ தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்... மேலும் பார்க்க

தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி: போலீஸ் துப்பாக்கிச்சூடு!

உ.பி.யில் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி துப்பாக்கியால் சுடப்பட்டார். உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ... மேலும் பார்க்க